குழந்தை பெற லைசென்ஸ் | தினகரன்

குழந்தை பெற லைசென்ஸ்

 

ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமூக பிரச்சினைகள் குறித்து அடிக்கடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். உலகிலேயே இந்தியாதான் முதன்முறையாக கேஷ்லெஸ் நாடாக மாறி இருக்கிறது.

வங்கியில் கேஷ் இல்லை, ஏடிஎம்-ல் கேஷ் இல்லை. மக்களிடம் கேஷ் இல்லை என தற்போதைய நிலைகுறித்து இணைய தள பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். தற்போது புது யோசனை ஒன்றை பிரதமருக்கு தெரிவித்திருக்கிறார்.

‘இந்தியாவில் குழந்தைகள் கடத்தல், சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் பற்றி கேட்கும்போதும், பார்க்கும்போதும் இதயம் வேதனையில் அழுகிறது.

அவர்களுக்கு தங்கள் பெற்றோர் யார் என்பதும், இதற்கு என்ன தீர்வு என்பதும் கூட தெரியாது. எனவே குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களை வளர்த்து ஆளாக்க முடியுமா என்ற தகுதியின் அடிப்படையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள பெற்றோர்களுக்கு லைசென்ஸ் தர வேண்டும்.

இந்த லைசென்ஸ் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு நடிகையாக இதை கோரவில்லை. சாதாரண ஒரு பிரஜையாக கேட்கிறேன்.

இதற்கு அங்கீகாரம் தந்து உதவ வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சஞ்சனாவின் இந்த யோசனைக்கு சில ரசிகர்கள் கொமென்ட் வெளியிட்டுள்ளனர். சஞ்சனாவின் யோசனை வரவேற்கத்தக்கது என்றும் புரட்சிகரமான யோசனை. ஆனால் இது நமது நாட்டுக்கு பொருத்தமாக இருக்காது என்றும் அதில் கூறி உள்ளனர்.


Add new comment

Or log in with...