வெலே சுதாவின் தாய் போதைப்பொருளுடன் கைது | தினகரன்


வெலே சுதாவின் தாய் போதைப்பொருளுடன் கைது

 
போதைப் பொருள் கடத்தியதாக தெரிவிக்கப்படும் பெண் ஒருவரையும் அவரது உறவினர் இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
கைதான இருவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
20 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைதான குறித்த 60 வயது பெண், பிரபல போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதாவின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
இதேவேளை வெலே சுதாவின் உறவினர் எனத் தெரிவிக்கப்படும் 28 வயதான குறித்த நபரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
 
மதுவரித் திணைக்களத்தால் நேற்று (05) இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் இன்று (06) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, அவர்கள் இருவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...