இன ஐக்கியம் உருவாக்குவதே 2017 ஆண்டின் பெரும் சவால் | தினகரன்

இன ஐக்கியம் உருவாக்குவதே 2017 ஆண்டின் பெரும் சவால்

 

கடந்த ஆண்டிலிருந்து ஏற்பட்டு வந்த பொருளாதார சவால்களுக்கு 2017ம் ஆண்டும் இலங்கை முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது டி. எஸ். சேனநாயக்க சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே அனைவரும் இணைந்த நாட்டை முன்னேற்ற பாடுபட வேண்டுமெனக் கூறினார்.

எஸ். டபிள்யூ. பண்டாரநாயக்க அரசியல் சுதந்திரம் மாத்திரமல்ல, பொருளாதார சுதந்திரத்தையும் பெற வேண்டுமெனக் கூறினார். இத்தலைவர்கள் இருவரினதும் கொள்கையின் பேரில் உருவான அரசியல் கட்சிகள் இரண்டினதும் இணைப்பால் உருவாக்கப்பட்டதே தற்போதைய அரசாங்கமாகும்.

2017ம் ஆண்டுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு மிகப் பெரிய சவால் பொருளாதார அபிவிருத்திக்காக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதாகும். அரசியல் ஸ்திரத் தன்மைக்கு அதுவும் ஒரு காரணமாகும். அண்டை நாடுகளாக சீனாவும் இந்தியாவும் அதற்காக நீண்டகாலத்தை அர்ப்பணிப்புச் செய்த நாடுகளாகும்.

அமெரிக்க அரசியலில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நீண்டகாலம் எடுத்தது. சமுதாயங்களிடையே ஏற்பட்ட மோதலை சமாதானத்துக்குக் கொண்டுவர ஜனாதிபதி ஜேம்ஸ் மொன்ரோவுக்கு கடும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பொருளாதார அபிவிருத்தியின் ஆணிவேர் அரசியல் ஸ்திரத்தன்மையாகும்.

இறக்குமதி சுமை:

1948 காலப் பகுதியில் இருந்த உலகத்தை விட தற்போதுள்ள உலகம் மாறுபட்டுள்ளது. பழைய பிரச்சினைகள் புதிய முகத்துடன் தலைதூக்கியுள்ளன. பொருளாதாரத்தின் வர்த்தக பற்றாக்குறையும் மற்றும் சென்மதி நிலுவையும் பெரும் பிரச்சினைக்கு உட்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுடன் நடத்தப்படும் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளின் போது ஏற்றுமதியை விட இறக்குமதியே அதிகரித்துள்ளது. இந்திய - இலங்கை ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளின்போது ஏற்றுமதியைவிட இறக்குமதியே அதிகரித்துள்ளது. இந்திய - இலங்கை ஏற்றுமதி இறக்குமதி வேறுபாட்டில் அதிக இலாபம் இந்தியாவுக்கே உள்ளது. இது ஒரு உதாரணமாகும்.

2015ம் ஆண்டு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பெறுமதி 4268 இலட்சம் அமெரிக்க டொலராகும். ஆனால் இலங்கை ஏற்றுமதி செய்த பொருட்களின் பெறுமதி 643 அமெரிக்க டொலராகும். அதனால் தான் இந்தியாவுக்கு அது இலாபமாக அமைந்தது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் மிளகாய், பெரியவெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்கள் முதலிடம் வகித்தன.

உப்பு இறக்குமதிக்காக மாத்திரம் 2015ல் செலவிட்ட தொகை 122 இலட்ச அமெரிக்க டொலராகும் அவ்வாண்டு அரிசி இறக்குமதிக்காக 135 இட்சம் அமெரிக்க டொலராகும். சீனி இறக்குமதிக்காக 34164 மில்லியன் ரூபா அதாவது 253 அமெரிக்க டொலரும் செலவாகியது. இலங்கையின் உற்பத்தியை விரிவுபடுத்தாததனால் ஏற்பட்ட நிலைமையாகும். கரும்பு பயிர்ச் செய்கைக்கு ஏற்ற காணி இருக்கும்போது தேசிய சீனி உற்பத்தி தேசிய பாவனையில் நூற்றுக்கு பத்து வீதமாகும். 2017ம் ஆண்டிலாவது உணவு உற்பத்தியை அதிகரித்தல் மூலம் இறக்குமதி செலவை குறைக்க இயலுமானால் ஏற்றுமதி வருமானம் அதிகரித்து வர்த்தக ஏற்றதாழ்வை குறைக்க முடியும்.

கடந்த வருடம் தேசிய நெல் உற்பத்தியாது இதுவரை இலங்கை பெறாத அளவிற்கு அமைந்த பாரிய நெல் உற்பத்தியாகும். ஆனால் 2017ம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளிநாட்டிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்படவுள்ளது. ஏனென்றால் பெரும் போகத்தில் 70 வீதமான காணிகளே வரட்சி காரணமாக பயிரிடப்பட்டுள்ளன.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கிடையான வேறுபாடு தொடர்பான யுத்தம் 1957ம் ஆண்டிலிருந்தே காணப்படுகின்றது. அந்த ஆண்டு ஏற்றுமதி வருமானம் 350.5 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததோடு இறக்குமதிக்கான செலவு 370.4 மில்லியன் அமெரிக்க டொலராகும். அப்போது டொலரின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4.76 ஆகும். 2015ம் ஆண்டு இறக்குமதி செலவு 18934.6 மில்லியன் அமெரிக்க டொலராகும். ஏற்றுமதி வருமானம். 10504.9 மில்லியன் அமெரிக்க டொலராகும். டொலர் ஒன்றின் இலங்கை ரூபா 144.60 ஆகும். தற்போது அது மேலும் அதிகரித்துள்ளது.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் இரண்டு பிரதான வழிகளாவன உல்லாசப் பயணத்துறையும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புமாகும். 2016ம் ஆண்டு இலங்கைக்கு உல்லாசப் பயணத் துறையில் பெரும் இலாபம் கிடைத்த ஆண்டாகும். ஸ்கண்டினியாவிலிருந்து உல்லாசப் பிரயாணிகளை வரவழைத்தல், YATCH படகு உல்லாசப் பிரயாணிகளை வரவழைத்தல் போன்ற பல நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதன.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கையானது ஐ. எஸ். தீவிரவாதிகளை முற்றாக ஒழிப்பதாகும். இந்த நிகழ்ச்சித் திட்டம் நேரடியான நடவடிக்கையாக (DIRECT ACTIONS) அமைந்தால் அப்பிராந்திய நாடுகளில் மீண்டும் நிலைமை உக்கிரமடையுமென வெளிநாட்டு ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள். அதேபோல் சீனாவுடனான டிரம்பிள் கொள்கையும் அதற்கு எதிராக சீனாவின் எதிர் நடவடிக்கைகள் பற்றியும் வெளிவரும் செய்திகள் பொருளாதாரத்துக்கு அவ்வளவு சிறந்த விடயமல்ல.

நீண்ட பின்னடைவுக்குப் பின் எமது தேயிலைக் கைத்தொழில் சீராகியுள்ளது. அதற்குக் காரணம் துருக்கி மற்றும் ஈரான் நாடுகள் எமது தேயிலைச் சந்தைக்குள் நுழைந்ததாகும். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட குழப்பநிலைமை தேயிலை வர்த்தக சந்தைக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கும் மற்றும் உல்லாசப் பிரயாண தொழிலுக்கும் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க முதலீட்டுடனான தொழிற்சாலைகளை வேறுநாடுகளுக்கு கொண்டு செல்லல் அமெரிக்காவின் வேலை வாய்ப்பின்மைக்குக் காரணமென டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் MAZIDA மோட்டார் வாகன தொழிற்சாலையை அந்நிறுவனம் இலாபம் பெறும் நோக்கில் மெக்ஸிகோவுக்கு கொண்டு செல்ல தயாரானது. பின்னர் அந்நிறுவனம் அத்தீர்மானத்தை மாற்றிக்கொண்டது. கடந்த நவம்பர் மாதம் 18ம் திகதி .NIKKEI ASIAA REVIEVS சஞ்சிகை டிரம்பின் அபாய எச்சரிக்கை 2017ம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி ஆய்வு செய்துள்ளது. 2017ம் ஆண்டில் மீண்டும் அமெரிக்கா தனது வட்டி வீதத்தை அதிகரிக்க இடமுள்ளதாக பொருளாதார விற்பன்னர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். அப்படியான நிலைமை ஏற்பட்டால் வெளிநாட்டு முதலீடுகள் நேரடியாகப் பாதிப்படையும்.

இலங்கை நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற பெரும் முயற்சி செய்து வருகின்றது. இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள ஏனைய பிராந்திய நாடுகளாவன ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக இந்த எட்டு நாடுகளும் ஒரே பிராந்தியத்தை சேர்ந்தனவாகக் கொள்ளப்படுகின்றன.

நேரடியான வெளிநாட்டு முதலீடுகள்:

வெளிநாட்டு முதலீடுகளைப் பெற அனைத்து நாடுகளும் பலவித பொருளாதார புனர்நிர்மாணம், வசதிகள் மற்றும் சட்டத்தை இலகுபடுத்தல் போன்ற விடயங்களை மேற்கொள்கின்றன.

வெளிநாட்டு முதலீடு ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்துமெனக் கூறினால் இலங்கையில் 4,70,000 பேர் தொழில் புரிவது நேரடி முதலீட்டால் இயங்கும் தொழிற்சாலைகளிலேயே ஆகும், இலங்கை 2016ம் ஆண்டில் 5 பில்லியன் டொலரை நேரடி வெளிநாட்டு முதலீடாக பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

எமது பிராந்தியத்திலுள்ள போட்டியைப் பார்த்தால் அது இலகுவான காரியமல்ல. 2014ம் ஆண்டோடு ஒப்பிட்டால் 2015ம் ஆண்டு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறைவாகும். ஏனென்றால் இரண்டு பொதுத் தேர்தல்கள் அவ்வருடம் நடைபெற்றதால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை பற்றிய பயம் அதற்குக் காரணமாக அமைந்தது என இலங்கை மத்திய வங்கி அறிக்கை (2015) கூறுகிறது.

அதேபோல் நேரடி வெளிநாட்டு முதலீட்டை 2017ம் ஆண்டில் பெறுவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை நாட்டில் காணப்பட வேண்டும். ஸ்திரத்தன்மையற்ற நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்புவதில்லை. இதனை LOCATIO SELECTION நிலைமையென முதலீட்டாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஐக்கிய நாடுகளின் WIR என்னும் அறிக்கை நேரடி வெளிநாட்டு முதலீடு பற்றி குறிப்பிடுகின்றது. இவ் வறிக்கை UNCIAD டன் தொடர்புடையது. அண்மையில் அவ்வறிக்கையில் இந்தியாவில் மோட்டார் வண்டி தொழிற்சாலைக்காக நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவின் தொழில் துறை உற்பத்திப் பிரிவு வளர்ச்சி அடைந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. அடுத்த வருடம் இலங்கை தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சி செய்கின்றது.

கடந்த ஏல விற்பனையின்போது இலங்கை தேயிலைத் தொழிலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிவாகத் தெரிகின்றது.

லிபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் இலங்கைத் தேயிலை மீது ஆர்வம் காட்டும் இரண்டு நாடுகளாகும். எகிப்து தேயிலையை கலவை செய்யும் திட்டத்துக்கு தயாராவதாகவும் துபாயோடு இணைந்ததாக புதிய சர்வதேச தேயிலை வர்த்தகச் சந்தையை உருவாக்கவுள்ளதாக தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் கூறப்படுகின்றது.

கருணாரத்ன அமரதுங்க


Add new comment

Or log in with...