ரூ. 25,000 அபராத தொகை; திங்கட்கிழமை இறுதி முடிவு | தினகரன்

ரூ. 25,000 அபராத தொகை; திங்கட்கிழமை இறுதி முடிவு

 

வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளிடம் இருந்து அறவிடக்கூடிய அதிகபட்ச அபராத தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதா? அல்லது குறைப்பதா? என்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (9ஆம் திகதி) இறுதி முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில், ஆராய நியமிக்கப்பட்ட உப குழு 9 ஆம் திகதி கூடி நியாயமான முடிவொன்றை எடுத்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சு. க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அபராதத் தொகை அதிகரிப்பு குறித்து வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சம்பந்தப்பட்ட சகல அமைச்சர்களும் உள்ளடங்கியதாக குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு பஸ் உரிமையாளர் சங்கங்கள், ஆட்டோ சங்கங்கள் பொலிஸார் மற்றும் பொது மக்கள் தரப்பில் கிடைத்துள்ள யோசனைகளை ஆராய்ந்து நியாயமான முடிவொன்றை எடுக்கும். இதன் அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவையினூடாக வாகன போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக அபராத தொகை 258 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...