ஷசி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு

Rizwan Segu Mohideen
 
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் ஷசி வெல்கமவின் விளக்கமறியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் மருமகனான சஷி வெல்கம, கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
 
இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலேயே சஷி வெல்கம உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
 
இது தொடர்பான வழக்கு இன்று (05) கொழும்பு மேலதிக நீதவான் ஜே. டொக்ஸி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் அவரது விளக்கமறியலை நீடிப்பதாக அறிவித்தார்.
 
கடந்த ஆட்சிக் காலத்தில், போக்குவரத்து சபையின் தலைவராக இவர் இருந்த வேளையில், பஸ் உதிரிப்பாக இறக்குமதியின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ரூபா 125 மில்லியன் மோசடி தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
3 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...