Friday, March 29, 2024
Home » அதிபர் மகேசனின் காலகட்டமே கொழும்பு விவேகானந்த கல்லுாரியின் பொற்காலம்

அதிபர் மகேசனின் காலகட்டமே கொழும்பு விவேகானந்த கல்லுாரியின் பொற்காலம்

by damith
September 25, 2023 5:02 pm 0 comment

முன்னாள் அதிபர் அமரர் சு.மகேசனின் காலகட்டமே கல்லூரி வளர்ச்சியின் பொற்காலமாக போற்றப்படுகின்றது. கல்லூரியின் முக்கிய பிரச்சினையாக இருந்த இடப்பற்றாக்குறையை நீக்கி புதிய கட்டடங்களை அமைப்பதற்காக இரவு பகலாக வீடு வீடாக சென்று நிதி சேகரிப்பதில் ஈடுபட்ட அவர்இ கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் புதிய யுக்திகளை வகுத்து செயற்படுத்தி வெற்றி கண்டார்.

அவரது காலகட்டமான 1978 ஆம் ஆண்டு பெண்களுக்கான கீழைத்தேய பாண்ட் வாத்தியக்குழு ஸ்தாபிக்கப்பட்டதுடன்இ இக்குழு அகில உலக இந்து மாநாட்டின் போதும் நேபாள மன்னரின் இலங்கை விஜயத்தின்போதும் பங்கேற்று பாடசாலைக்கு புகழையீட்டிக் கொடுத்தது.

இதனைவிட 1981 ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியாரின் இலங்கை விஜயத்தின்போது அவரது வரவேற்பில் கலந்துகொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலை என்ற கௌரவத்தையும் தன்வசப்படுத்திக்கொண்டது.

கல்வித்துறையில்….

உயர் தர விஞ்ஞான பிரிவை ஆரம்பித்தமை.(1974)

அன்றைய நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வித் திட்டத்திற்கமைய தொழில் முன்னிலைப் பாடம்,அழகியல் (சங்கீதம்,நடனம்,நாடகம்) ஆகிய பாடங்களுக்கான வகுப்பறை வசதிகளை ஏற்படுத்தியமை.

இதன் மூலம் 1975 இல் முதன்முறையாக தே.க.பொ.த(N.C.G.E) பரீட்சையில் தோற்றிய56 மாணவர்களில் 36 பேர் உயர்தரக்கல்வி(H.N.C.E)

கற்கத் தகுதி பெற்றனர். அதே ஆண்டில் வரலாற்றின் முதன்முறையாக(G.C.E A/L) வர்த்தகப் பிரிவிலிருந்து பல்கலைக்கழக அனுமதியும் பெற்றனர்.

ஆங்கிலக்கல்வியை மேம்படுத்த அவரே களமிறங்கி உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தைப் போதித்தார்.

6-9 வரையான வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி் பெற்ற முன்னாள் மாணவர்கள் மூலம் விசேட மேலதிக வகுப்புகளை நடாத்தினார்.

1976 இல் பாடசாலையின் பொன்விழாவையும், பரிசளிப்பு விழாவையும் நடாத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு பாடசாலையையும் பிரபலப்படுத்தினார்.

விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திலும் அதீத கவனம் செலுத்தினார். விளையாட்டு மைதானம் இல்லாத போதும் பாடசாலை மட்டத்தில் மட்டுப்படுத்தப் பட்டுருந்த மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மாவட்ட மட்டத்திற்கு உயர்த்தினார்.மெய் வல்லுனர் போட்டிகளை சுகததாச விளையாட்டு அரங்கில் முதன் முறையாக நடாத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். ஆசிரியர்,மற்றும் காரியாலய உதவியாளர்கள் பற்றாக் குறையை நீக்க கல்விக் காரியாலயங்களில் கையேந்தி நிற்கவில்லை.

மாறாக திறமை வாய்ந்த முன்னாள் மாணவர்களின் உதவியையே பெற்றார்.(அபிவிருத்திச் சங்கத்தினூடாக சிறு கொடுப்பனவும் வழங்கப்பட்டது.)

சாரணர்,சாரணிய இயக்கங்களை நவீனமயப் படுத்தி மாணவர் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தினார். அவர்களைச் சமூக விழாக்களில் தொண்டரணியாக களமிறக்கி,விவேகானந்தாவின் நற்பெயரைச் சமூக மயப்படுத்தினார்.

விழியுணர்வற்றோருக்கான தமிழ்மொழி மூலமான கற்றலுக்கு வாய்ப்பளித்த முதல் தமிழ் பாடசாலை என்ற பெருமையும இவரது காலத்திலேயே கிடைத்தது. முன்னாள் அதிபர் அமரர் மகேசனின் நினைவுதின நிகழ்வு எதிர்வரும் 2023.09.26ஆம் திகதி மாலை 4 மணிக்கு விவேகானந்த கல்லுாரியின் பிரதான மணடபத்தில் நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT