29ல் சமந்தா நிச்சயதார்த்தம் | தினகரன்

29ல் சமந்தா நிச்சயதார்த்தம்

 

சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்டு வந்தநிலையில் இருவரும் தங்கள் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கும் என்று தெரிவித்தனர்.

இதனால் நாக சைதன்யா தம்பி அகிலுக்கு அவரது காதலி ஸ்ரேயாவுடன் முன்னதாக திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். கடந்த வாரம் அகில், ஸ்ரேயா நிச்சயதார்த்தம் முறைப்படி நடந்தது. வரும் ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணத்தை இத்தாலியில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

அகில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தநிலையில் நாக சைதன்யாவுக்கு சமந்தாவுடன் நிச்சயதார்த்தை முடித்துவிட குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். இதற்கு பிடிகொடுக்காமலிருந்த இருவரும் தற்போது நிச்சயதார்த்தத்துக்கு ஒருவழியாக சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் திருமணத்தை அடுத்த ஆண்டு இறுதியில்தான் நடத்த வேண்டும் என கண்டிஷன் விதித்திருக்கின்றனர். இதையடுத்து வரும் ஜனவரி 29ம் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை நாகார்ஜூனா செய்து வருகிறார்.

இதற்காக புதிய பட படப்பிடிப்பு எதையும் ஜனவரி இறுதிவரை ஒப்புக் கொள்ளாமல் தள்ளிவைத்திருக்கிறார். அகில் திருமணம் வெளிநாட்டில் நடந்தாலும் நாக சைதன்யா திருமணம் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இருவித சம்பிரதாயங்களுடன் இந்த திருமணம் நடக்கவிருக்கிறது.


Add new comment

Or log in with...