வடமாகாண பதில் முதலமைச்சராக ஐங்கரநேசன் பதவியேற்பு | தினகரன்

வடமாகாண பதில் முதலமைச்சராக ஐங்கரநேசன் பதவியேற்பு

 

வடமாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் நேற்று (03) பதவி ஏற்றுக்கொண்டார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் லண்டன் மற்றும் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் எதிர்வரும் (19)வரை வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக பதவி வகிப்பார்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் யாழ்.ஆளுநர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணியளவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவி ஏற்பின் போது வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...