லொத்தர் டிக்கட் விலை இன்று முதல் அதிகரிப்பு | தினகரன்

லொத்தர் டிக்கட் விலை இன்று முதல் அதிகரிப்பு

 

டிக்கட் விலையை அதிகரிக்கும் அரசின் நிலைப்பாடு இன்று முதல் அமுலாக உள்ளதால்

லொத்தர் டிக்கட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களும், முகவர்களும் டிக்கட் விற்பனையை நிறுத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

வீதிகளில் தற்போது 03 லட்சம் பேர் லொத்தர் டிக்கட்டுக்களை விற்பனை செய்கின்றனர். இதில் வலது குறைந்தவர்களும் அடங்குவர்.

டிக்கட் விலை அதிகரித்தால் விற்பனையை நிறுத்துவதென டிக்கட் விற்பனையாளர்கள் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தனர்.

தற்போதைய விலையான 20 ரூபாவுக்கும் டிக்கட்டை விற்பனை செய்ய கஷ்டமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்ஜட் தீர்மானத்துக்கு அமையவே டிக்கட் விலை அதிகரிக்கப்படுவதாக லொத்தர் சபைத் தலைவர் ஷியாமலா பெரேரா தெரிவித்தார்.

தற்பொழுது ஒரு டிக்கட்டுக்கு மூன்றரை ரூபா தரகுப் பணத்தை நாம் வழங்குகிறோம். விலை அதிகரிப்பினால் இது 4 ரூபாவாகும்.

இந்த விலை அதிகரிப்பை மாற்றுமாறு நாம் ஜனாதிபதியைக் கோரியுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனையாளர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

(எப். எம்.) 


Add new comment

Or log in with...