அடிப்படைவாதத்தை தூண்டி ஆட்சியை மாற்ற மஹிந்த முயற்சி | தினகரன்

அடிப்படைவாதத்தை தூண்டி ஆட்சியை மாற்ற மஹிந்த முயற்சி

 

சிங்கள, பௌத்த அடிப்படைவாதத்தை தூண்டி, தமிழ் மக்களுக்கு எதிரான இனத்துவேசத்தை வளர்த்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் எவ்வாறான மாற்று நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பது தற்போதைய பாரிய கேள்வியாக மாறியுள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து, தான் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் , அல்லது தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேவை மஹிந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ளது. தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாப்பதற்குள்ள தேவையே இதற்கான பிரதான காரணமாகும்.

அவரது குடும்பத்தின் மீது கொலை முயற்சி மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியமை, பாரிய அளவிலான ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதன் ஊடாகவே தனது குடும்பத்தை பாதுகாக்க முடியும் என்பது இயல்பு. புலிகளை அழித்த மாவீரரன் என்றதொரு தோரணையைக் காட்டி, தங்கள் பக்கத்திலே மக்கள் சக்தி அதிகாரம் உள்ளதென ராஜபக்‌ஷ காண்பிக்க முனைந்தார். இதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றை அச்ச நிலைக்குள் வைத்திருப்பதற்கும் அவர்கள் முயற்சித்து வருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார். 

 


Add new comment

Or log in with...