CEAT உற்பத்தி நிறுவனத்தின் 150வது வீதிப் பாதுகாப்பு நிகழ்ச்சி பம்பலப்பிட்டியில்

 

மிகப் பெரும் டயர் உற்பத்தி நிறுவனமான CEAT Kelani Holdings தனது 150ஆவது வீதிப் பாதுகாப்பு நிகழ்ச்சியை அண்மையில் மிலாகிரிய சென்.போல்ஸ் மகளிர் பாடசாலையில் முன்னெடுத்திருந்தது.

இந்நிகழ்ச்சியானது பொலிஸ் அதிகாரிகளின் வீதி பாதுகாப்பு பற்றிய காட்சியும் மாணவிகளுக்கு வீதி பாதுகாப்பு உபகரணங்களையும் பொருட்களையும் அன்பளிப்பு செய்தது. மேலும் வீதி பாதுகாப்பு பற்றியஒருநாடகமும் இடம்பெற்றதுடன் மாணவிகளுக்கு வீதி பாதுகாப்புகை நூல்களும் விநியோகிக்கப்பட்டது. இதனால் 400 மாணவிகள் பயன்பெற்றனர்.

CEAT கம்பனியின் “பாடசாலை பிள்ளைகளுக்கான வீதிப் பாதுகாப்பு சமுதாய உதவித் திட்டத்தில் மாணவர்கள், பெற்றோர், போக்குவரத்து சேவைகளை வழங்குவோர் பிரதானமாக பாடசாலை வேன் சாரதிகள் ஆகியோர் ஈடுபடுத்தப்படுவதுடன் கூம்புகள் உட்பட வாகனப் போக்குவரத்து அங்கிகள், பாதுகாப்பு ஜக்கெட்டுகள்,போக்குவரத்துஅடையாளக் குறிகள் மற்றும் உதவிப் பொருட்கள் அடங்கிய போக்குவரத்து முகாமைத்துவ பொருட்கள் ஒவ்வொரு பாடசாலைக்கும் அன்பளிப்பு செய்யப்படுகின்றது.

வீதிப் பாதுகாப்புபெரும் பிரச்சினையாகிவிட்டது என்று தெரிவித்த CEAT Kelani Holdings நிறு வன சந்தப்படுத்தல் பிரதி பொது முயாமயாளர். பிஷ்றிலத்திப் போக்குவரத்து விதிகளைஅலட்சியம் செய்வதாலும், விதிகளை கடைப்பிடிக்காமையாலும் ஏற்படும் வீதி விபத்துக்களால் மரணமடைவோரினதும் காயங்களுக்கு உள்ளாவோரினதும் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துவருவதாக கூறினார்.

‘Maga Yana Maga’ என்ற தலைப்பில் 2009ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இலங்கைமக்கள் மனதில் வீதிப் போக்குவரத்துவிதிகளைபதியவைக்கும் நம்பிக்கையுடன் பாடசாலை மட்டத்தில் வீதி மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது நோக்கமாகும். இந்த நிகழ்ச்சி இதுவரை நாட்டின் தென்மாகாணம், வடமாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் ,கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் நடத்தப்பட்டுள்ளது. கம்பனியின் நிறுவன சமூகபொறுப்புணர்வு திட்டமுயற்சிகளின் கீழ் ‘CEAT Cares’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கம்பனி நடத்திய தொடர் நிகழ்ச்சிகளால் 50,000க்கும் அதிகமானமாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளார்கள். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
10 + 4 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...