Friday, March 29, 2024
Home » ‘அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்’ நூல் வெளியீட்டு விழா இன்று

‘அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்’ நூல் வெளியீட்டு விழா இன்று

by gayan
September 23, 2023 8:39 am 0 comment

இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வெளியிடும் ‘அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (23) மாலை 4.00 மணிக்கு பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில்

நடைபெறும்.

இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறுவதுடன், கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

பிரமுகர்களின் மங்கல விளக்கேற்றலுடன், செல்வி பிரியன்கா ஆன் பரான்சிஸ் தமிழ் வாழ்த்துப் பாடி நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகியவற்றின் இணைப்பாளர் த.சிவசுப்பிரமணியம் வரவேற்புரையையும் தொடக்கவுரையம் நிகழ்த்துவார்.

வாழ்த்துரைகளை ஞானம் கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம் ஆசிரியர், மருத்துவர் ஞானசேகரன் மற்றும் கல்விஅமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் உடுவை. எஸ்.தில்லநடராஜா நிகழ்த்துவார்.

இந்நிகழ்வில் ஊடக அதிதிகளாக தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன், தமிழன் பிரதம ஆசிரியர் இரா.சிவராஜா, வீரகேசரி நிறுவன பிரதம செய்தி முகாமையாளர் ஆர்.பிரபாகன், சிரேஷ்ட ஊடகவியலாள உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து சிறப்பிப்பர்.

நூல் விமர்சனத்தை எழுத்தாளரும் தகவம் செயலாளருமான வசந்தி தயாபரன் முன்வைப்பார்.

நூலின் முதல் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வார். சிறப்புப் பிரதிகளை தொழில் அதிபர்களான சண்முகப்பிரியா கார்த்திக், ராஜ்பிரசாத் விஸ்வாநதன், கௌசல்யா கோவிந்தப்பிள்ளை ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

நூலுக்கான ஏற்புரையை நூலாசிரியர் அன்னலட்சுமி இராஜதுரை நிகழ்த்துவார். நன்றியுரையை இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகத்தின் ஊடக இணைப்பாளர் கலாபூஷணம் கே.பொன்னுத்துரை நிகழ்த்துவார்.

இந்நிகழ்வை மேமன்கவி தொகுத்து வழங்குவார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT