‘தலையாட்டி பொம்மை | தினகரன்

‘தலையாட்டி பொம்மை

 

எஸ்.பிலிம்ஸ் சார்பில் பகவதி பாலா, திருச்சி மாரனேரி தனபால், ஊத்துக்கோட்டை இளங்கோ தயாரித்துள்ள படம் ‘தலையாட்டி பொம்மை’. பகவதி பாலா ஹீரோவாக நடித்து, எழுதி இயக்கியுள்ளார்.

காயத்ரி, சவுந்தர், தனபால், இளங்கோ, போண்டா மணி, கிங்காங் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பிச்சைக்கனி, ஏ.எல்.அன்பு. இசை, விஜய் பிரபு. இதன் பாடல்கள் வெளியிடப்படடன.

படம் பற்றி பகவதி பாலா கூறும்போது, ‘தொலைந்துபோன காதலனைக் கண்டுபிடிக்க, சில இளைஞர்களுடன் பேய் வேடம் போட்டு தேடுகிறாள் காதலி. தேடும் இடத்தில் உண்மையாகவே பேய் பிடித்து விடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. 30ம் திகதி ரிலீஸ் ஆகிறது’ என்றார். 


Add new comment

Or log in with...