சுப்பர் பொலிஸ் | தினகரன்

சுப்பர் பொலிஸ்

 

ராம்சரண் தேஜா, பிரியங்கா சோப்ரா, சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, ஸ்ரீஹரி, மஹிகில், அதுல் குல்கர்னி உட்பட பலர் நடித்த தெலுங்கு படம், துபான். இது இந்தியில் சாஞ்சீர் என்ற பெயரில் வெளியானது.

இந்தப் படம் தமிழில் ‘சுப்பர் பொலிஸ்’ என்ற பெயரில் டப்பாகிறது. ரிலையன்ஸ் என்டர்டெயியின்மென்ட் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தாலா, வெங்கட்ராவ் தயாரிக்கின்றனர்.

அபூர்வ லாகியா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.கே ராஜராஜா தமிழாக்கம் செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘ காக்கி சட்டைக்கு கௌரவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் ராம் சரண்.

இதனால், ஐந்து வருடங்களில் 23 முறை இடமாற்றம் செய்யப்படுகிறார். கடைசியாக மும்பைக்கு மாற்றப்படுகிறார். அங்கு பிரகாஷ் ராஜ் நடத்தும் ரவுடி ராஜ்ஜியத்தை எப்படி அழிக்கிறார் என்பது கதை. இம்மாதம் வெளியாகிறது’ என்றார். 


Add new comment

Or log in with...