Friday, March 29, 2024
Home » கோழி இறைச்சி ரூ. 850 முதல் 900 ரூபா வரை குறையும்
2023ஆம் ஆண்டு இறுதிக்குள்

கோழி இறைச்சி ரூ. 850 முதல் 900 ரூபா வரை குறையும்

by gayan
September 23, 2023 12:14 pm 0 comment

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை உள்ளூர் சந்தையில் 850 ரூபா முதல் 900 ரூபாவரை கொள்வனவு செய்ய வாய்ப்பு ஏற்படுமென்று வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கோழி இறைச்சி விலையை 850 ரூபாவுக்கு குறைக்க வேண்டுமென்று கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டதுடன், இவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூர் உற்பத்தியாளர்கள் வீழ்ச்சியடைவதை தடுக்க இன்னும் தாம் அவகாசம் அளித்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கோழி இறைச்சி விலையை 100 ரூபாவால் குறைக்க உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததுடன், இன்று முதல் 100 ரூபாவும் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 100 ரூபாவும் குறைக்கப்படுமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது, ​​கோழி இறைச்சியின் சில்லறை விலையை 100 ரூபாவால் குறைக்க முடியுமென்று கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் இறுதிவரை முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்கள் தற்போதைய முட்டை விலையை நிலைநிறுத்த ஒப்புக்கொண்டால், முட்டை இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT