கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு ரூபா 71 மில். நஷ்டஈடு | தினகரன்


கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு ரூபா 71 மில். நஷ்டஈடு

 
கிளிநொச்சி சந்தையில் தீயினால் எரிந்த 122 வியாபாரிகளுக்கு ரூபா 71 மில்லியன்  நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த செப்டெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு இன்று (28) நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
 
மீள்குடியேற்றம், புனா்வாழ்வு,  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சா் டி.எம். சுவாமிநாதன் இதனை வழங்கி வைத்தார். 
இன்று காலை கிளிநொச்சி மாவட்டச் செலயகத்தில், மாவட்டச் செயலாளா் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நஷ்டஈடு வழங்கி வைக்கப்பட்டது.
 
 
இதன்போது, 44 பிளாஸ்டிக் பொருள் கடைகளுக்கும், 53 புடவை கடைகளுக்கும், 22 பழக் கடைகளுக்கும், 2 தையல் கடைகளுக்கும், 01 தேனீா் கடைக்கும்  நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. 
 
19 வியாபாரிகளுக்கு, ரூபா 15 இலட்சம் வீதமும் 13 பேருக்கு ரூபா 10 இலட்சம் வீதமும், 40 வியாபாரிகளுக்கு ரூபா 5 இலட்சம் வீதமும் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
 
 
ஏனைய வியாபாரிகளுக்கு தலா ரூபா 3 இலட்சம், 2 இலட்சத்து 50 ஆயிரம், ஒரு இலட்சம் என நஷ்டஈடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் அமைச்சர் சுவாமிநாதன், வட மாகாண ஆளுநா் ரெஜினோல்ட் கூரே, இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினா் சி. ஶ்ரீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமார், அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபா் சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலாளா் கோ. நாகேஸ்வரன், உள்ளூராட்சி உதவி ஆணையாளா் பிரபாகரன், கரைச்சி பிரதேச  செயலாளா் க.கம்சநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
 
 
(கிளிநொச்சி குறூப் நிருபா் - எம். தமிழ்செல்வன்)
 
 

Add new comment

Or log in with...