கட்டுநாயக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பூட்டு | தினகரன்

கட்டுநாயக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பூட்டு

 
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாடு செல்வோரை பதிவு செய்யும் கருமபீடம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர், தங்களை பதிவு செய்யும் பொருட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமையகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நவீனமயப்படுத்தல் நடவடிக்கை காரணமாக குறித்த கருமபீடம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...