அக்னி சோதனை நிறைவு; விமான போக்குவரத்து வழமைக்கு (Update) | தினகரன்

அக்னி சோதனை நிறைவு; விமான போக்குவரத்து வழமைக்கு (Update)

 
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் 'அக்னி-5' ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்புக்காக குறித்த ஏவுகணை தயாரிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
 
 
சுமார் 6,000 கிலோ மீற்றர்கள் வரை சென்று தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் அருகே உள்ள வீலர் தீவில் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனையடுத்து, குறித்த இந்திய வான்வெளி பிராந்தியத்திற்கான விமானங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
இந்தியா ஏவுகணை சோதனை; விமான பயணங்களில் தாமதம்
 
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான விமான போக்குவரத்து தாமதம அடையும் என பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் அறிவித்துள்ளது.
 
இந்தியாவினால் மேற்கொள்ளப்படவுள்ள 'அக்னி-5' ஏவுகணை சோதனை காரணமாகவே குறித்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இன்று (26) பி.ப. 12.30 மணியிலிருந்து குறித்த விமான பயணங்கள் வழமைக்கு திரும்பும் என அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...