களுதாவளையில் விமானத்தின் பாரிய பாகம் மீட்பு (Photo) - Update | தினகரன்

களுதாவளையில் விமானத்தின் பாரிய பாகம் மீட்பு (Photo) - Update

 
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கடலில் சிதைவடைந்த விமானமொன்றின் உதிரி பாகங்களை இலங்கை கடற்படையினரால் இன்று (23) அதிகாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
நேற்று (22) மாலை புதுக்குடிருப்பு கடலில் 7 கிலோ மீற்றர் தொலைவில் சிதைவடைந்த விமானமொன்றின் உதிரிப்பாகங்கள் மிதப்பதாக இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு டோரா படகுடன் சென்ற கடற்படையினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அங்கு காணப்பட்ட சிதைவடைந்த விமானத்தின் உதிரிப்பாகத்தினை புதுக்குடியிருப்பு கடற்கரைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.
 
 
கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்த விமானத்தின் உதிhப்பாகங்கள் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் விமானப்படையினர் திருகோணமலையிலுள்ள விமானப்படைதளத்திற்கு கொண்டு சென்றதாக விமனாப்படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 
இந்த சிதைவடைந்த விமானத்தின் உதிரிப்பாகம் ரஸ்யநாட்டின் போர் விமனத்தின் உதிரிப்பாக இருக்கலாம எனவும் இது சுமார் 9அடி நீளமுடையது எனவும் விமானத்தின் பின் பகுதியெனவும் விமானப்படை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
 
 
இந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
 
இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதனைப் பார்ப்பதற்காக பெருமளவிளான பொது மக்கள் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்ரைக்கு சென்றதுடன் அதனை பார்வையிட்டனர்.
 
 

 
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று (23) காலை விமானம் ஒன்றின் பெரிய பாகம் ஒன்றை மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பெலிசார் தெரிவித்தனர். இவ்விடையம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…
 
 
கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரையில் பெரியதொரு இயந்திரம்போன்றதொரு உருவம் அடைந்து கிடப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் பொலிசாருக்கு மீனவர்கள் அறிவித்ததையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் கடலின் அடியில் கிடந்த பொருளைப் பார்வையிட்ட பின்னர் இது விமானத்தின் பாகம் ஒன்று என உறுதிப்படுத்தினர்.
 
 
பின்னர் அவ்விடத்திற்கு கடற்படை, மற்றும் விமானப்படையினர் ஆகியோர் வரவழைக்கப்பட்னர்.
 
 
மீட்கப்பட்டுள்ள விமானத்தின் பாகம் எந்த நாட்டுக்குரியது என சரியாக அடையாளம் காண முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த விமானத்தில் ரஷ்ய எழுத்துகள் காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
இவ்விமானத்தின் பாகத்தை விமானப் படையினர் எடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவ்விடையத் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார்  தெரிவித்தானர்.
 
(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வடிவேல் சக்திவேல்)  
 

Add new comment

Or log in with...