தகவல் அறியும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமன கடிதம்

 
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்ட இரு புதிய உறுப்பினர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தவிசாளர், நீதியரசர் ஏ.டபிள்யு.ஏ. சலாம் மற்றும் கலாநிதி திருமதி செல்வி திருச்சந்திரன் ஆகியோரே, குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
 
 

Add new comment

Or log in with...