பொலிஸாரால் அமைக்கப்பட்ட வீடு துறைநீலாவணை பெண்ணுக்கு | தினகரன்

பொலிஸாரால் அமைக்கப்பட்ட வீடு துறைநீலாவணை பெண்ணுக்கு

 
பொலிஸாரினால் அமைக்கப்பட்ட வீடொன்றை கணவனை இழந்த பெண் ஒருவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் அமைக்கப்ப்பட்ட குறித்த வீடு, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்;தரவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வறுமை நிலையில் உள்ள தமிழ் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
 
இவ்வீட்டை வழங்கும் நிகழ்வு நேற்று (21) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.ஏ. சனத் நந்தலால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஜயக்கொடி ஆராய்ச்சி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
 
சுமார் ரூபா 08 இலட்சத்து 50ஆயிரம் செலவில் இந்த வீடு அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
மூன்று பிள்ளைகளுடன் மிகவும் வறுமை நிலையில் மூன்று பிள்ளைகளுடன் ஓலைக்குடிசையில் வாழ்ந்துவரும் கணவனை இழந்த தமிழ்  பெண் ஒருவருக்கே இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது.
 
 
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜவ்பர்கான்)
 

Add new comment

Or log in with...