நவ்யாவின் மனிதாபிமானம் | தினகரன்

நவ்யாவின் மனிதாபிமானம்

 

பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர். தமிழிலும் நடித்துள்ளார். இப்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசிக்கிறார். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, நேற்று முன் தினம் விமானம் மூலம் கொச்சி வந்தார். அங்கிருந்து நிகழ்ச்சி நடக்கும் ஒட்டலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

வழியில், ஒரு வாலிபரும் இளம் பெண்ணும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனடியாக இருவரையும் தனது காரிலேயே ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நவ்யா நாயரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுபற்றி நவ்யா நாயர் கூறும்போது, ‘பெரும்பாலும் சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவுவது அரிதாகி விட்டது. நாமும் சில நேரம் இது போன்ற விபத்துகளில் சிக்குவோம் என்று யாருக்கும் புரிவதில்லை’ என்றார்.

விபத்தில் பலியான இளைஞர் பெயர் ஷாரோன். துபாயில் வேலை பார்க்கிறார். விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு துபாய் செல்வதற்கு காரில் விமான நிலையில் சென்றுகொண்டிருந்தார். பின்னால் பைக்கில் அவரது சகோதரியும் கணவரும் வந்துகொண்டிருந்தனர். பைக் ஓட்டும் ஆசையில் காரை சகோதரியின் கணவரிடம் கொடுத்துவிட்டு, பைக்கில் சென்றபோது, இந்த விபத்து நடந்தது பின்னர் தெரியவந்தது.

 


Add new comment

Or log in with...