ரகுல் ப்ரீத் green Signal | தினகரன்

ரகுல் ப்ரீத் green Signal

 

தமிழில் என்னமோ ஏதோ, புத்தகம் என ஒன்றிரண்டு படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு படத்தில் நடிக்க சென்றார். தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். மீண்டும் தமிழில் அவரை நடிக்க சில இயக்குனர்கள் அழைத்தபோது பிஸியாக இருப்பதாக கூறிவிட்டார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் ஜோடியாக துப்பறிவாளன் படத்தில் நடிக்க ரகுலிடம் பேச்சு நடந்தது.

கோலிவுட்டில் ரீஎன்ட்ரிக்கு பொருத்தமான படமாக இருக்கும் என்று எண்ணி நடிக்க சம்மதித்தார் ரகுல். திடீரென்று தெலுங்கில் ராம் சரண் படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே துப்பறிவாளன் படத்திலிருந்து விலகினார். சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகி றார். இதற்கான டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்தது.

கார்த்தி பங்கேற்று நடித்தார். ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. கார்த்தியின் போட்டோ ஷுட்டும் நடத்தப்பட்டது. இதில் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்கை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. அவரும் நடிக்க ஓகே சொல்வார் என எதிர்பார்ப்பதாக பட தரப்பில் கூறப்படுகிறது. விஷாலுக்கு கால்ஷீட் மறுத்து ரெட் சிக்னல் காட்டிய ரகுல், கார்த்திக்கு கிரீன் சிக்னல் காட்டுவார் என்று தெரிகிறது.


Add new comment

Or log in with...