பொதுநலவாய மாநாட்டை வைத்து எம்மை எவரும் அச்சுறுத்த முடியாது
பொதுநலவாய மாநாட்டை வைத்து
எம்மை எவரும் அச்சுறுத்த முடியாது
உள்நாட்டு பிரச்சினையில்
எந்தவொரு நாடும் தலையிட இயலாது
எம்.எஸ். பாஹிம்
இலங்கையில் நடை பெறவுள்ள பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டை பணயக் கைதி போல
வைத்து எமது நாட்டின் உள்ளக பிரச்சினையில் தலையிட எந்த நாட்டிற்கும் இடமளிக்க
முடியாது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் நடை பெறவுள்ள பொதுநல வாய மாநாடு பெரும் பாலான நாட்
டுத் தலைவர்களின் பங்களிப் புடன் சிறப்பாக நடைபெறும் எனவும் ஓரிரு நாடுகள்
பங்கேற்காமல் இருப் பதால் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். சு.க.
ஏற்பாடு செய்திருந்த ஊடக வியலாளர் மாநாட்டில் உரையாற்று கையிலேயே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற் றப்பிரேரணை விவகாரத்தை வைத்து பொதுநலவாய மாநாட்டில்
பங்கேற்காதிருக்க சில நாடுகள் தயாராவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப்
பதிலளித்த அவர்,
எமது நாட்டின் சட்டங்களுக்கமையவே பிரதம நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் இறைமையிலோ உள்ளகப் பிரச்சினையிலோ தலையீடு செய்ய
எந்த நாட்டிற்கும் உரிமை கிடையாது. வெள்ளைக்காரனுக்கு தலைசாய்க்க ஜனாதிபதி தயாராக
இல்லை.
சிறிய நாடானாலும் எமது உள்ளக விடயங்களில் பெரிய நாடுகளுக்கு தலையிட முடியாது.
பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டை நாம் சிறப்பாக நடத்தி முடித்தோம். இதில் பங்கேற்ற
நாடுகள் இலங்கை குறித்து பாராட்டுத் தெரிவித்தன.
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டிலும் அநேகமான நாடுகள் பங்கேற்கும். பேர்த்தில்
நடைபெற்ற மாநாட்டின் போதும் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதைத் தடுக்க சில
நாடுகள் முயன்றன. அது பயனளிக்கவில்லை. சகலரையும் திருப்திப்படுத்த முடியாது.
மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு சார்பான பல நாடுகள் உள்ளன. குற்றப்பிரேரணை
விவகாரத் தினால் இங்கு பெரிய பாதிப்பு எற்படுமென கருதவில்லை என்றார்.