நந்தன வருடம் புரட்டாதி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா மாதம் பிறை 04
FRIDAY ,SEPTEMBER, 21, 2012
வரு. 80 இல. 225

மாகாண சபைகளின் அனுமதி பெற்று திவிநெகும சட்டமூலம் சட்டமாக்கப்படும்

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிப்பு

மாகாண சபைகளை அறிவுறுத்த நடவடிக்கை

26,000 ஊழியர்கள் ஓய்வ+தியம் பெற தாமதம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக அரசாங்கம் திவிநெகும திணைக்கள சட்டமூலத்தை துரிதமாக மாகாண சபைகளின் அனுமதிக்காக சமர்ப்பிக்கும். இது தொடர்பில் மாகாண சபைகளை அறிவூட்டி வருவதோடு அவற்றின் அனுமதி கிடைத்தவுடன் மேற்படி சட்ட மூலம் மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

விவரம் »

பொருளாதார மற்றும் தொழில்துறைசார் தகவல்கள்
பெற்றுக்கொள்வதைச் சுலபமாக்கும் நோக்கத்துடன்
மகளிர் புள்ளிவிபர வங்கியை உடனடியாக ஆரம்பிப்பேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பிரிட்டன் நாடு கடத்திய 25 பேர் நேற்று விசேட விமானம் மூலம் வருகை

* 50 பிரிட்டிஷ் அதிகாரிகளால் இலங்கையிடம் ஒப்படைப்பு

* 13 தமிழர்கள், 8 முஸ்லிம்கள், 4 சிங்களவர்கள்

பிரிட்டினில் புகலிடம் கோரி நிராகரிக் கப்பட்ட மற்றும் வீசா காலம் முடிவடைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வர்களுள் 25 பேர் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பிரிட்டனிலிருந்து நேற்றுக் காலை இலங்கை வந்த புளூபன ரோமா எயார் வேஸ¤க்குச் சொந்தமான பீ. பி.ஓ. 8882 ரக விசேட விமானத்தின் மூலம் 25 பேரும் நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விவரம் »

இறைதூதரை அவமதிக்கும் அமெரிக்க படத்திற்கு எதிராக நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்

ஜும்ஆத் தொழுகையின் பின் பேரணி; கடையடைப்பு, ஹர்த்தால்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், புனித இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் வெளியிடப் பட்ட “முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” என்ற திரைப்படத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

விவரம் »

பொதுநலவாய பாராளுமன்ற மாநாடு;

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டை உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது

பொதுநலவாயப் பாராளுமன்ற அமைப்பின் 58வது மாநாட்டை இந்நாட்டில் நடத்தியதன் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாடு உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

விவரம் »

இலங்கை - இந்திய ஜனாதிபதிகள் நேற்று டில்லியில் சந்தித்து பேச்சு

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் விசேட கவனம்

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று பிற்பகல் சந்தித்தார். அதன் போது இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்கள்.

விவரம் »