ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா மாதம் பிறை 02
நந்தன வருடம் புரட்டாதி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,SEPTEMBER, 19, 2012
வரு. 80 இல. 223
 

கினிகத்தேன வாராந்த சந்தையில் வியாபாரிகள் பாதிப்பு

கினிகத்தேன வாராந்த சந்தையில் வியாபாரிகள் பாதிப்பு

கினிகத்தேன நகரில் வாராந்த சந்தை நடத்தும் இடத்தில் வியாபாரிகளுக்கு முறையாக இடம் ஒதுக்கப்படவில்லை. அம்பகமுவ பிரதேச சபையால் நிர்வகிக்கப்படும், கினிகத்தேன நகரில் நடத்தப்பட்டு வரும் வாராந்த சந்தையில், முறையாக வியாபாரிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை. இதனால் வாராந்த சந்தைக்கு வரும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ பிரதேச சபையால் நடாத்தப்படும் இந்த வாராந்த சந்தை கினிகத்தேன பேருந்து நிலைய தரிப்பிட வீதியில் கடந்த பல மாதங்களுக்கு முன் ஆரம்பித்தமை குறிப்பிட தக்கது. ஆனால் வியாபாரிகளுக்கு இட ஒதுக்கீட்டை செய்து கொடுக்கவில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி