பொதுநலவாய பிரதிநிதிகள் குழு
இன்று வட பகுதிக்கு விஜயம்
* 60ழ
பேர் கொண்ட குழு செல்ல விசேட விமானம்
* யாழ். முல்லை, கிளிநொச்சி நிலைமைகளை நேரில் கண்டறிய வசதி
* பிரிட்டிஷ் பிரதிநிதிகளுக்கு பிரத்தியேக ஏற்பாடு
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள 60 வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (13
ஆம் திகதி) வட பகுதிக்கு விஜயம் செய்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு
மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று யுத்தத்திற்கு பின்னரான உண்மையான
நிலைமைகளை நேரில் கண்டறிய உள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
பிரிட்டன் மற்றும் கனடா பாராளு மன்றத்தைச் சேர்ந்த சில எம்.பிக்கள் இறுதி யுத்தம்
நடைபெற்ற இடங்களை மாத்திரம் காண்பதற்காக தனியாக அங்கு செல்ல உள்ளதாகவும் இதற்கு
எதுவித தடையும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், ஏற்கனவே தீர்மானம்
எடுத்துவிட்டு வடக்கிற்கு செல்வதில் பிரயோசனமில்லை. திறந்த மனதுடனே அங்கு செல்ல
வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விவரம் » |
|
|
 |
|

1000 ரூபாவுக்கும் குறைவாக சமுர்த்தி நிவாரணம்
பெறுகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும்
அக்கொடுப்பனவை
1000 ரூபாவினால் அதிகரிப்பேன். இதைத் தவிர 3
வயதிற்கு குறைவான பிள்ளைகள் உள்ள அனைத்து
குடும்பங்களினதும் பிள்ளைகள் சார்பில் ரூபா
1500 மேலதிக நிவாரண தொகையை வழங்குவேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
|
|
|
 |
|
|
 |
|
 |
|
இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட கபில வஸ்துதாது
இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பி வைப்பு
நேற்றைய வழிபாடுகளிலும் ஜனாதிபதி பங்கேற்பு
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்ப ட்டு கடந்த 25 நாட்களாக மக்கள் வழிபாட்டுக்காக
வைக்கப்பட்டிருந்த கபிலவஸ்து புனித தாது நேற்றையதினம் விமானம் மூலம் இந்தியாவுக்கு
மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது.
நாட்டின் 10 இடங்களில் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த இப்புனித தாது
நேற்றும், நேற்று முன்தினமும் களனி ரஜமகாவிகாரையில் மக்களின் வழிபாட்டுக்கு வைக்கப்
பட்டிருந்தது. இதற்கான இறுதி பூஜை நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நேற்று நடைபெற்றன.
இப்பூஜை நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்.
விவரம் » |
|
|
|
|
|

ஒப்சேர்வர், மொபிடெல் பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் விழா
நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட
முன்னாள் டெஸ்ட் கப்டன் மார்வன் அத்தப்பத்துவிடமிருந்து கண்டி திருத்துவக் கல்லூரி
மாணவன் நிரோஷன் திக்வெல்ல விருதைப் பெறுகிறார். கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இவ்
வைபவத்தில் இடமிருந்து வலமாக ஒப்சேர்வர் பிரதம ஆசிரியர் தினேஷ் வீரவன்ஸ, லேக்ஹவுஸ்
தலைவரும், முகாமைப் பணிப்பாளருமான பந்துல பத்மகுமார, விளையாட்டுத்துறை அமைச்சர்
மஹிந்தானந்த அளுத்கமகே, மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் டீ சில்வா
ஆகியோரும் காணப்படுகின்றனர். (படம்: சமந்த வீரசிரி) |
|
|
|
|
|
தனியான ம. உ. ஆணையாளர்
நியமன யோசனைக்கு
இலங்கை எதிர்ப்பு
பொதுநலவாயத்துக்கு மனித உரிமைகள் தொடர்பாக தனியான ஆணையாளர் ஒருவரை நியமிக்க
வேண்டும் என்ற ஆலோசனைக்கு இலங்கை எதிர்ப்பை தெரிவித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி
சில்வா நேற்று தெரிவித்தார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் குழு அறையில் நேற்று மனித உரிமைகள்
தொடர்பான விசேட ஆணையாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக அமர்வு நடைபெற்றது. இந்த
அமர்வின் போது பொதுநலவாய நாடுகளுக்கும் மனித உரிமைகள் தொடர்பான விசேட ஆணையர் ஒருவரை
நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
விவரம் » |
|
|
 |
|
|
|
|
|

களனி ரஜமஹா விஹாரைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
புத்தபெருமானின் கபிலவஸ்து புனித தாதுவைத் தரிசித்ததுடன் அங்கு விஹாராதிபதி
சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டிய மஹிந்த சங்கரக்கித்த மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி
பெற்றார். (படம்: சுதத் சில்வா) |
|
|
|
 |
|
|
|
|
|
 |
 |
|
|
|