ஹிஜ்ரி வருடம் 1433 ஷவ்வால் மாதம் பிறை 26
நந்தன வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,SEPTEMBER, 13, 2012
வரு. 80 இல. 2187
 

பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக மியாண்டாட் நியமனம்

பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக மியாண்டாட் நியமனம்

இலங்கையில் நடைபெறும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றும் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ஜாவித் மியாண்டாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு செல்லவுள்ள இவர், பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் வெற்றிபெறுவதற்கு தேவையான பல்வேறு உத்திகளை வழங்கவுள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் அவர் முழு நேரமும் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களுடன் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டாலும் துடுப்பாட்ட பயிற்சி மற்றும் வீரர்களின் துடுப்பாட்ட நுணுக்கங்களில் கவனம் செலுத்தாது வீரர்களின் மனோ நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி பெறுவதற்கான சில யோசனைகளையும் உத்திகளையும் கற்றுக் கொடுப்பார். இலங்கையில் உள்ள கள நிலவரங்கள் மற்றும் எதிர் அணியை வீழ்த்துவது தொடர்பான சில ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார். அத்துடன் வீரர்களை உற்சாகப்படுத்துவதே தமது பிரதான நோக்கமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி