பாடுகளில் பங்கேற்றால் மட்டுமே உயிர்ப்பில் பங்கு கொள்ள முடியும்
பாடுகளில் பங்கேற்றால் மட்டுமே
உயிர்ப்பில் பங்கு கொள்ள முடியும்
திருச்சிலுவை மகிமைத் திருநாளின் சிந்தனை...!
nghதுக் காலத்தின் இருபத்து மூன்றாம் வாரமாகிய நாளைய வெள்ளிக்கிழமையன்று
கத்தோலிக்கத் திருச்சபை திருச்சிலுவையின் மகிமைத் திருவிழாவைக் கொண்டாடுகிறது.
அவமானத்தின் சின்னமாக விளங்கிய சிலுவையை அன்பின் சின்னமாகவும் மீட்பின் சின்னமாகவும்
மாற்றியவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ‘ஒருவன் என்னைப் பின்தொடர்ந்து வர
விரும்பினால் அவன் தன் சிலுவையையும் சுமந்து கொண்டு வரட்டும்’ எனக் கூறினார்.
இதன் மூலம் கிறிஸ்தவ வாழ்க்கையையும் சிலுவையையும் தனியாகப் பிரித்துப்பார்க்க
முடியாது என்பது தெளிவாகிறது.
ஒரு பாதிரியார் திருப்பலியின் போது பிரசங்கத்தில் கூறிய சம்பவமொன்று நினைவுக்கு
‘வாழ்வில் ஒவ்வொருவருக்கும் உள்ள சிலுவையை எனக்குக் காட்ட முடியுமா’ என
திருப்பலியின் போது அவர் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த ஆலய சமையல்காரர் தனது
மனைவியைக் கூட்டிவந்து இது தான் சுவாமி எனது சிலுவை என்றாராம்.
இதனை நாம் ஒவ்வொரு விதமாகப் பார்க்க முடியும். எனினும் நாம் அனைவருமே வாழ்க்கையில்
ஏதோ ஒன்றை சுமையாக அல்லது வாழ்க்கையையே சுமையாக நினைத்துக் கொண்டு வாழ்கிறோம்.
அத்தகைய சுமைகளில் ஒன்றாகவே குறித்த சமையற்காரர் தமது மனைவியைப் பார்க்கின்றார்.
தன்னைப் பின்தொடர்ந்து வருபவரையும் சிலுவையைச் சுமந்து வரச் சொல்லும் இயேசு வாழ்க்கை
பல கஷ்டங்க ளுடனான ஒரு பயணம் அதில் இடர்ப்படும் சகல துன்பங்களையும் சவால்களையும்
வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை எமக்குக் கூறுகின்றார்.
அத்துடன் சோதனைகளுக்கு அகப்படாமல் பொறுமையுடனும் சகிப்புடனும் வழி நடந்தால்
மாத்திரமே வாழ்வில் உயிர்ப்பைக் காண முடியும் என்பதையும் கூறுகின்றார்.
‘பாடுகள் இன்றி உயிர்ப்பு இல்லை’ என்பதை சத்திய வேதம் நமக்கு எடுத்தியம்புகிறது.
கிறிஸ்துவின் பாடுகளில் பங்குகொள்பவர்களே உயிர்ப்பிலும் பங்குகொள்ள முடியும். அதனால்
இயேசுவைப் பின்தொடர்ந்து அவரது சிலுவைப் பாதையை தொடரவிரும்பும் நாம் நம் தோளில்
சிலுவையையும் மனதில் யேசுவையும் சுமப்போம் அப்போது அந்தப் பாதையின் பயணம் சுகமாகும்.
சிலுவையும் நம்மை அழுத்தாது. காட்டுப் பாதையொன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்
களிடம் மரங்கள் கேட்டதாம் ‘எங்களைக் கொண்டு சிலுவையை வடிக்கும் உங்களால்
உங்களைக்கொண்டு ஒரு இயேசுவை வடிக்க முடியுமா?’ என்று.
நாம் சிந்திக்க வேண்டிய விடயம். இது கிறிஸ்தவர்களாகிய நம்மை கிறிஸ்துவாகப் பார்க்க
உலகம் ஆசைப்படுகிறது. இயேசுவைப் போல எம்மால் வாழ முடியுமா?
இந்தசிலுவையின் மகிமைப் பெரு விழாவில் இதைப்பற்றி சிந்திப்போம்.