ஹிஜ்ரி வருடம் 1433 ஷவ்வால் மாதம் பிறை 26
நந்தன வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,SEPTEMBER, 13, 2012
வரு. 80 இல. 2187

பல்கலைக்கழகங்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசியல் தலையீடு முற்றாக நீக்கப்பட வேண்டும்

பல்கலைக்கழகங்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசியல் தலையீடு முற்றாக நீக்கப்பட வேண்டும்

ஒரு மனிதனின் அறிவு முதிர்ச்சிக்கும் அவன் வாழ்நாள் பூராகவும் நற் பண்புகளை கடைப்பிடிப்பதற்கும் பல்கலைக்கழகங்கள் சிறந்த வழி காட்டிகளாக விளங்குகின்றன. பல்கலைக்கழகங்களில் பண்டைய குரு குல நற்பண்புகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆசிரியர்களை மதித்தல், பல்கலைக்கழகங்களுக்குள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை தவிர்த் துக் கொள்ளுதல் ஆகியவற்றுடன் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டு மணித்தியாலங்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் மூன்று மணித்தியாலங்கள் நூலகங்களிலும் நேரத்தை செலவிட வேண்டும் என்ற கண்டிப்பு பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் 40ம் ஆண்டு தசாப்தத்திலும் 50ம் ஆண்டு தசாப்தத்திலும் இந்த நற்பண்புகள் எங்கள் நாட்டின் அன்றிருந்த பேராதனைப் பல் கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடைப் பிடிக்கப்பட்டன. இதனால் தான் வெளிநாடுகளில் அன்று எமது பல்கலை க்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு உடனடியாக பல்கலைக்கழகங் களில் விரிவுரையாளர், பேராசிரியர் பதவிகளும், டாக்டர்கள், பொறியிய லாளர், கணக்காளர் மற்றும் சட்டத்தரணி பதவிகளும் எவ்வித காலதாமத மும் இன்றி உடனடியாக கிடைத்தன.

அது மட்டுமன்றி எமது நாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறுபவர்களின் கல்வித்தரம் அதி உயர் நிலையில் இருந்ததனால் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களும் பிரான் ஸின் சோபோன் பல்கலைக்கழகமும் கலாநிதி பட்டத்திற்கான மேற்படிப்பை தொடர்வதற்கு எவ்வித கண்டிப்பும் இன்றி புலமைப்பரிசில்களையும் வழங்கியது. இன்று எங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு பணம் கொடுத்து கலாநிதி பட்டம் பெறுவதற்கு கூட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தயக்கம் காட்டுகின்றன. அதற்கு காரணம் இன்று எமது பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருப்பதேயாகும்.

இவ்விதம் தழைத்தோங்கியிருந்த எங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களின் கல்வி நிலை இன்று வீழ்ச்சியடைந்திருப்பதற்கு பிரதான காரணம் மாண வர் சங்கங்கள் என்ற பெயரில் மாணவர் அமைப்புகள் பல்கலைக் கழகத்தின் வேந்தர், உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளின் அதிகாரங்களை பறித்து, அவர்களை தலையாட்டும் பொம்மைகளாக செயற்படுவதற்கு சில மாணவர் அமைப்புகளின் ஊடாக ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி.ஈ. போன்ற அமைப்புகள் வெற்றிகரமான முறையில் சதித்திட்டங்களை நிறைவேற்றிய தேயாகும். பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பீடாதிபதிகள், உபவேந்தர் ஆகியோரின் அதிகாரம் பறிபோனதனால் மாணவர் அமைப்புகள் அவ்வதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை சீர்குலைக்கச் செய்தன.

இவ்விதம் சீர்குலைந்து போன பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தையும் கல்வித் தரத்தையும் உயர்த்துவதற்கு முதலில் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்று உயர்கல்வி அமைச்சு எடுத்த முயற்சிகளை யும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் முறியடித்தன. பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் ஒரு மாணவன் பல்கலைக் கழகத்திற்குள் ஆங்கிலம் பேசுவதற்கு இன்று தடை விதித்திருப்பதுடன் மாணவர் ஒருவர் பேராசிரி யரை சந்திக்க விரும்பினால் மாணவர் அமைப்பின் பிரதிநிதியுடன் சென்றுதான் அவரை சந்திக்க முடியும் என்ற கட்டுப்பாடும் விதித்து ள்ளன.

அதனால்தான் இன்று பல்கலைக்கழக கல்வி கழுதை தேய்ந்து கட்டெறு ம்பாகிய நிலைக்கு வந்துள்ளது. இன்றைய அவல நிலையை போக்க வேண்டுமாயின் முதலில் எமது பல்கலைக்கழகங்களில் மாணவர்களை தூண்டி வன்முறைகளில் ஈடுபட வைக்கும் ஜே.வி.பி. போன்ற அரசியல் அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து, பல்கலைக்கழகங்களில் அரசியல் செய்யும் மாணவர்களை தயவு தாட்சண்யம் இன்றி கடுமையாக தண்டிக்க வேண்டும். அவசியமாயின் அவர்களை ஓரிரு ஆண்டுகளுக்கு பல்கலை க்கழக கல்வியை தொடர முடியாத நிலையையும் ஏற்படுத்தலாம். கடுமை யான குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தில் இருந்து முழுமையாக நீக்கிவிடவும் வேண்டும்.

அதே போன்று பல்கலைக்கழக ஆசிரியர், பேராசிரியர்களை வெளியில் உள்ள அரசியல் சக்திகள் தங்கள் விருப்பப்படி வழிநடத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன் றைய ஆசிய, தெற்காசிய நாடுகளின் அரசியலில் சீன நாட்டு மாணவர்கள் இந்தியாவிலோ, இந்திய மாணவர்கள் பாகிஸ்தானிலோ, பாகிஸ்தானிய மாணவர்கள் இந்தியாவிலோ உயர்கல்வியை கற்க முடியாது. இதனை உணர்ந்து கல்வியில் தரம் குறைந்த நிலையில் உள்ள நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை கைகூப்பி வரவேற்று அவர்கள் மூலம் பெரு மளவு பணத்தையும் சம்பாதித்திருக்கின்றது. இலங்கை மாணவர்களும் இப்போது மலேசியா, சிங்கப்பூர், பூட்டான், நேபாளம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்குவதற்கு அரசாங்கம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இலங்கையில் செயற்படுவதற்கு அனுமதி வழங்குவதை சுயநல நோக்கத்துடன் எமது நாட்டு பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் எதிர்க்கிறார்கள்.

இந்த வெளிநாட்டு மாணவர்களை எமது பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் இப்போது எடுத்து வரும் முயற்சிகளுக்கும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். பல்கலைக்கழகங்களில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதை நிறுத்தி பல்கலைக்கழகங்களை கல்வி பயிலும் புனித ஆலயங்களாக மாற்ற வேண்டும். அப்போது எங்கள் நாட்டின் வரலாறு, கலாசாரம், மனித நாகரீகம், விஞ்ஞானம் குறிப்பாக பெளதீகவியல், இரசாய னவியல் ஆகிய துறைகளில் பெரும் ஆராய்ச்சிகளை நடத்தி உயர் கல்வியின் மேம்பாட்டுக்கு பல்கலைக்கழகங்கள் பணியாற்ற முடியும்.

இதனை அடைய வேண்டுமானால் ஜே.வி.பி. போன்ற பல்கலைக்கழக கல்வியை சீர்குலைக்கும் அரசியல் அமைப்புகளின் கொட்டம் அடக் கப்பட வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி