பொதுநலவாய கூட்டத்திற்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரமில்லை
கொழும்பில் நேற்று ஆரம்பமான
பொதுநலவாய கூட்டத்திற்கு
தீர்மானம் எடுக்கும் அதிகாரமில்லை
கொழும்பில் நேற்று ஆரம்பித்த 58வது பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றிய கூட்டத்தொடரில்
முன்வைக்கப்ப டும் பிரேரணைகளில் மனித உரிமை மீறல்கள் பற்றி பொதுநல அமைப்பு நாடுகளில்
விசாரணை செய்வதற்கு ஒரு ஆணையாளரை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணையும் இருக்கின்றது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்க ளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத் தில் நேற்று காலை நடந்த
ஊடகவிய லாளர் மாநாட்டில் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்கள் இது பற்றி கரு த்துத்
தெரிவிக்கையில், கொழும்பு மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய ஆணையாளர் ஒருவரை
நியமிக்க வேண்டும் என்ற பிரேரணை விவாதத் திற்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய இந்த
மாநாட்டிற்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறினார். ஜனாதிபதி அவர்கள்
தொடர் ந்தும் கருத்து தெரிவிக்கையில் அவுஸ்திரேலியாவின் பெர்க் நகரில் நடந்த
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய்வதற்கு ஒரு ஆணையாளரை
நியமிக்க வேண்டும் என்ற கனடாவின் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்று கூறினார்.
இதற்கான ஆணையாளர் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை ஆய்வு
செய்வதற்காக அல்ல பொதுநல அமைப்பு நாடுகள் அனைத்திலும் இடம்பெறும் மனித உரிமை
மீறல்களை ஆராய்வதற்காகவே நியமிப்பதென்று இந்தப் பிரேரணையில் யோசனை
தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஜனாதிபதி கூறினார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இந்த மாநாட்டில்
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தானும் ஜே.வி.பி யின் சார்பில் விஜித ஹெரத்தும்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திரு. சுமந்திரனும் கலந்து கொள்ள இருப்பதாக
கூறினார்.
இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் எங்கள் நாட்டிற்கு
அகெளரவத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் கருத்துக்களை வெளியிட மாட்டோம் என்றும்
நாட்டின் மேம்பாட்டுக்காக நாம் அரசாங்கத்துடன் ஒத்துழைப்போம் என்றும் திரு. ஜோன்
அமரதுங்க கூறினார்.