பெற்றோரின் கவனக் குறைவே சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு காரணமாகும்
பெற்றோரின் கவனக் குறைவே சிறுவர்கள்
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு காரணமாகும்
சிறு பிள்ளைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றி இன்று நாடெங்கிலும் நாளாந்தம்
வேதனை அளிக்கக்கூடிய செய்தி கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது பற்றி சமீபத்தில்
பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் செய் திப் பிரிவு
பொறுப்பாசிரியர்களையும் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், எங்கள் நாட்டில்
சிறு பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகமாக வீடுகளிலேயே இடம்
பெறுகின்றன என்ற அனைவரும் வேதனைப்படக்கூடிய உண்மையான கருத்தை எடுத்துரைத்தார்.
வீட்டில் உள்ள தாத்தாமார், மாமாமார், அண்ணன்மார், மைத்துனர்கள் போன்றவர்களே இவ்விதம்
சிறு பிள்ளைகளை பாலியல் ரீதியில் இம்சித்த சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதற்கு போதியளவு
ஆதார ங்கள் இருக்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி, தங்கள் பிள் ளைகளை முதலில்
வீட்டில் உள்ளவர்களிடம் இருந்தும், அயல வர்களிடம் இருந்தும் காப்பாற்றுவது
பெற்றோரின் கடமை என்று கூறினார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலை வேன்களில் அனுப்பி வைக்கும் போது அந்த வேன்களில்
பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய பொறுப்புணர்வுடைய பெண் ஒருவர் இருக்கி றாரா?
என்பதை முதலில் ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும். அது போன்று சிறு பிள்ளைகளை
ஆசிரியர்களிடம் டியுசன் வகு ப்புகளுக்கு அனுப்பும் போதும் அவர்களுக்கு பாதுகாப்பு
இருக்கி றதா? என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்விதம் பெற்றோர் தங்கள் சிறு பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளை கண்ணும்
கருத்துமாக வளர்த்தால் அவர்களுக்கு எத்தகைய பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும்
ஏற்படுவதை தவிர்த்து விடலாம். இவ்விதம் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை
பாதுகாப்பாக வைப்பதற்கு பதில் தங்களுக்கு நன்கு தெரிந்தவர்களின் மற்றும் அயலவர்களின்
பாதுகாப்பில் விட்டுவிட்டு செல்லும் போதே பாலியல் ரீதியிலான துஷ்பிரயோ கங்களை இந்த
அப்பாவி சிறு பிள்ளைகள் அனுபவிக்க வேண்டி யிருக்கிறது.
விவாகரத்தின் மூலம் அல்லது மனஸ்தாபங்களின் மூலம் பிரிந்து வாழும் பெற்றோரின்
பிள்ளைகளே இவ்விதம் பாலியல் துஷ்பிர யோகத்திற்கு அதிகமாக இலக்காகிறார்கள்.
விவாகரத்து செய்த பெண்ணுடன் சேர்ந்து வாழும் ஆண்கள் அப்பெண்ணின் மூத்த தார த்து பெண்
பிள்ளைகளை தனது பிள்ளைகள் போல் அன்போடு பராமரிப்பதற்கு பதில், சந்தர்ப்பம்
கிடைக்கும் போது இந்த அப்பாவி பிள்ளைகள் மீதும் தங்கள் காம வெறியை கட்டவிழ் த்து
விடுகிறார்கள் என்று சமீபத்தில் சமூகவியலாளர்கள் நடத்திய ஆய்வொன்றின் மூலம்
தெரியவந்துள்ளது.
நாம் இவ்வளவு நேரமும் சிறு பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோ ரின் கடமை என்பதை
எடுத்துரைத்தோம். விடலைப் பருவத்தை அடை ந்த தங்கள் பெண் பிள்ளைகளை அதே வயதையுடைய ஆண்
நண்பர்களிடம் இருந்தும் பாதுகாப்பது பெற்றோரின் கடமையா கும்.
தங்கள் மகள்மார் இப்போது 16,17 வயதை அடைந்துவிட்டார்கள், அவ ர்களுக்கு தனியாக சென்று
தங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் அளவுக்கு திறமையும்,
மதி நுட் பமும் இருக்கிறதென்று சில பெற்றோர் நம்பி, பிள்ளைகள் மீது அதிக கண்காணிப்பை
செலுத்தாமல் அவர்களை டியுசன் வகுப்பு களுக்கும், நூலகங்களுக்கும் சென்று படிப்பதற்கு
கட்டுப்பாடற்ற முறையில் அனுமதியை வழங்குவதுண்டு.
இதனையே விடலைப் பருவத்தையுடைய ஆண், பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்து, தங்கள்
கையடக்கத் தொலைபேசிகளில் காண்பிக்கப்படும் துர்நடத்தை படங்களை பார்த்து, உணர்ச்சி
பர வசமடைந்து தங்களுடைய பள்ளி தோழன் அல்லது தோழியுடன் சில மணி நேரத்தை திரைப்பட
மாளிகையில் அல்லது அமைதி யான கடற்கரை புதர்களில் இல்லையேல், ஒரு ஹோட்டல் அறை யில்
குதூகலமாக கழிக்கலாம் என்ற நம்பிக்கையில் தவறான செய ற்பாடுகளில் இறங்குகிறார்கள்.
இதனால் ஏற்படப்போகும் பாரதூரமான விளைவுகளை அவர்கள் அப் போது உணர்ந்து கொள்வதில்லை.
பொலிஸாரின் கையில் சிக்கி னால் தங்களுக்கும் தங்கள் பாடசாலைக்கும், பெற்றோருக்கும்
பேரவமானம் ஏற்படும் என்பதையும் அவர்கள் உணராமல், தங்க ளுக்கு பாரதூரமான விளைவுகளை
ஏற்படுத்தும் தீய செயற்பாடுக ளில் ஈடுபட்டு, வாழ்நாள் பூராவும் வேதனையை அனுபவித்து
வரு கிறார்கள்.
எனவே, இத்தகைய தவறுகளை விடலைப் பருவத்தைச் சேர்ந்த தங்கள் பிள்ளைகள் செய்வதை தடுக்க
வேண்டுமானால் தங்கள் பிள்ளைகளை பெற்றோர் 20 வயது எல்லையை கடந்துவிடும் வரை மிகவும்
அவதானமாக கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண் டும். 20 வயதை அடைந்த ஆணோ, பெண்ணோ
தங்களுக்கு சமூ கத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை நன்கு உணர்ந்திருப்பார்கள்.
அவ்விதம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவனமாக பராமரித்தால் நிச்சயம் இது போன்ற
பாலியல் துஷ்பிரயோகங்கள் நாட்டில் இடம் பெறுவதை முற்றாக நிறுத்திவிடலாம்.