ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 18
நந்தன வருடம் ஆடி மாதம் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,AUGUST, 07, 2012
வரு. 80 இல. 186

இஸட் புள்ளி விவகாரம்:

தீர்வு எட்டப்படும் வரை பல்கலைக்கழக அனுமதியில்லை

மானியங்கள் ஆணைக்குழு உச்சநீதிமன்றத்துக்கு அறிவிப்பு

இஸட் புள்ளிகள் (z-score)  தொடர்பான விவகாரத்திற்கு முடிவு எட்டப்படும் வரையில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்திடம் உறுதியளித்துள்ளது.பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் பணியானது பொதுவாக ஒவ்வொரு வருடத்திலும் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறுவதுடன், இந்த ஆண்டிலே அப்பணியை ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சார்பாக உச்ச நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார்.

விவரம் »

பொருளாதார மற்றும் தொழில்துறைசார் தகவல்கள் பெற்றுக் கொள்வதைச் சுலபமாக்கும் நோக்கத்துடன் மகளிர் புள்ளிவிபர வங்கியை உடனடியாக ஆரம்பிப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ரூ.35 இலட்சம் பெறுமதியான அழுகிய வெள்ளைப் பூடு மீட்பு

அமைச்சரின் பணிப்பையடுத்து சுற்றிவளைப்பு

மக்கள் பாவனைக்கு உதவாத 41 ஆயிரம் கிலோகிராம் நிறைக்கு அதிகமான வெள்ளைப் பூடு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.இவற்றின் பெறுமதி சுமார் 35 இலட்சம் ரூபாவென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்தது. கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு . . . . .

விவரம் »



வீரகேசரியுடன் வாஸ் குடும்பத்தினர் இணைந்து நடத்திய அமரர் கே.வீ.எஸ். வாஸின் நூறாவது பிறந்தநாள் நினைவஞ்சலி (05) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மொரிஷியஸ் நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெ. ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. வீரகேசரி நிறுவன நிர்வாக இயக்குனர் குமார் நடேசன் வரவேற்புரை நிகழ்த்துவதையும், மேடையில் நாளிதழ்களின் ஆசிரியர்கள், அமரர் கே.வி.எஸ். வாஸ் அவர்களின் புதல்வர் கே.வி.எஸ். மோகன், நூல் அறிமுக உரையை நிகழ்த்திய கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆகியோரை காணலாம். (படம்: கே. பொன்னுத்துரை)

ஒரு சிலரின் இழி செயலுக்காக அரசை குறைகூற முடியாது

இலங்கை முஸ்லிம்களை கெளரவமாக வாழச் செய்கின்ற ஒரு அரசாங்கமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கும் நீங்களும் நாங்களும் ஏற்படுத்திக் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அது என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் முதலீட்டு வாணிபத்துறை தொழில் வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

விவரம் »



பதுளையில் நேற்று புதிய மாவட்ட செயலகக் கட்டிடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாடாவை வெட்டித் திறந்து வைத்த போது எடுத்த படம். அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா ஆகியோரும் அருகில் காணப்படு கின்றனர்.
(படம்: நளின் ஹேவா பத்திரன)