சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் பிணையை பெறுவதற்காக நிதி
நெருக்கடியில் சிக்கியிருக்கும் கிரீஸ் அடுத்த இரு ஆண்டுகளுக்கும் 11.5 பில்லியன்
யூரோ செலவுகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
இந்த செலவு குறைப்பு மூலமே கிரீஸ¤க்கான 130 பில்லியன் யூரோ கடன் பிணையின் அடுத்த
தவணைக்கான 31.5 பில்லியன் யூரோக்களை பெறுவதற்கு தகுதிபெற முடியும்.
இந்த கடன் பிணையை பெறாத பட்சத்தில் கிரீஸ் தீவால் நிலைக்கு தள்ளப்பட்டு யூரோ
நாடுகளில் இருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செலவு குறைப்புக்கான சிக்கன நடவடிக்கை திட்டம் ஆகஸ்ட் இறுதியில் கிரீஸ்
அரசினால் அறிமுகப்படுத்தப்பட வுள்ளது.
இதன் மூலம் கிரீஸ் சம்பள குறைப்பு, ஓய்வூதிய குறைப்பு என மேலும் பொதுச் செலவுகளை
குறைக்க திட்டமிட்டுள்ளது.