சோமாவத்தி வன பிரதேசத்தில் திடீர் தீ; 50 ஏக்கர் நாசம்
சோமாவத்தி வன பிரதேசத்தில்
திடீர் தீ; 50 ஏக்கர் நாசம்
அணைக்கும் பணியில்
விமானப்படை ஹெலிகள்
ஸாதிக் ஷிஹான்
பொலன்னறுவை, சோமாவத்தி பாதுகாப்பு வன பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ
காரணமாக சுமார் 50 ஏக்கர் களுக்கும் அதிகமான பிரதேசம் எரிந்து சாம்பலாகியுள்ளது.
சோமாவத்தி விகாரைக்கு முன்னால் உள்ள சுங்காவில காட்டுப் பகுதியில் நேற்றுக் காலை 10
மணி அளவில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்
அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, வேகமாக தீ மேலும் பரவுவதை தடுக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய
நிலையம் விமானப் படையின் உதவியை நாடியுள்ளது.
ஹிங்குரங்கொடை விமானப்படைத் தளத்திலிருந்து உடனடியாக பெல் 212 ரக இரு ஹெலிகொப்டர்கள்
தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர், குறூப்
கெப்டன் அன்ரு விஜேசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.