சீன நீச்சல் வீராங்கனை யே iவேன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊக்கமருந்து குற்றச்சாட்டினை
பிரித்தானிய ஒலிம்பிக் குழு நிராகரித்துள்ளது.
16 வயதான யே iவேன் லண்டன் ஒலிம்பிக் சாதனையை அண்மையில் பதிவு செய்தார். 400 மீற்றர்
கலப்பு நீச்சல் போட்டியிலேயே அவர் உலக சாதனையை பதிவு செய்திருந்தார்.
இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை அமெரிக்கா வெற்றி கொண்டது.
யே iவேனின் சாதனை சர்ச்சைக்குரியதும், நம்ப முடியாத ஒன்றெனவும் அமெரிக்க நீச்சல்
குழுவின் பிரதம பயிற்றுனர் குற்றம்சாட்டினார். அதன் பிரகாரம் யே iவேன் தடை
செய்யப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் தன் மீதான குற்றச்சாட்டை பொய் என
நிருபித்தார்.