ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 14
நந்தன வருடம் ஆடி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,AUGUST, 03, 2012
வரு. 80 இல. 183
 

பளு தூக்குதலில் முஸ்லிம்களுக்காக திருத்தப்பட்ட விதி அமுல்

பளு தூக்குதலில் முஸ்லிம்களுக்காக திருத்தப்பட்ட விதி அமுல்

முஸ்லிம்களுக்காக பளு தூக்குதல் போட்டியில் ஆடை விதி தளர்த்தப்பட்டது. அதன்படி முதல்முறையாக முழு உடலையும் மறைக்கும் உடையணிந்து ஒலிம்பிக் பளு தூக்குதலில் பங்கேற்றார் டுனீசிய வீராங்கனை காதர் ஹசீன்.

பளு தூக்குதலில் பங்கேற்பவர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையில் உடையணியக் கூடாது என்பது பொதுவான விதி. இந்நிலையில் கடந்த ஆண்டில் அமெரிக்கா சார்பில் இந்த விதியை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த கோரிக்கையை முன்வைத்தது. அதன்படி பளு தூக்குதலில் முழு உடை அணிந்து பங்கேற்கலாம் என்று விதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக முழுமையாக உடலை மறைக்கும் உடையை அணிந்து போட்டியில் பங்கேற்றார் டுனீசிய வீராங்கனை காதர் ஹசீன் 19 வயதாகும் அவர் 69 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி