ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 14
நந்தன வருடம் ஆடி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,AUGUST, 03, 2012
வரு. 80 இல. 183
 

பெட்மின்டன் காலிறுதிக்கு தெரிவான சீன, தென்கொரிய, இந்தோனே'pய வீராங்கனைகள் தகுதி நீக்கம்

பெட்மின்டன் காலிறுதிக்கு தெரிவான சீன, தென்கொரிய, இந்தோனே'pய வீராங்கனைகள் தகுதி நீக்கம்

லண்டன் ஒலிம்பிக் பெட்மின்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் விட்டுக்கொடுத்து விளையாடிய 8 வீராங்கனைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

நொக் அவுட் சுற்றை கணக்கை கருத்தில் கொண்டு வேண்டுமென்றே தோற்று ஊழலில் ஈடுபடும் அவலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த மோசமான கலாசாரம், பெட்மின்டன் பெண்கள் இரட் டையர் பிரிவு போட்டியில் நடந்துள்ளது.

இதில் பங்கேற்ற 16 ஜோடிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சீனாவின் வலுவான ஜோடியாக யு யங்வாங் ஜியாலி ஜோடி தென் கொரியாவின் ஜுங் கியுங்-கிம் ஹா நா ஜோடியிடம் தோல்வி கண்டது.

வேண்டுமென்றே வெளியே அடித்தும், வலையில் அடித்தும் புள்ளிகளை சீன ஜோடி தாரைவார்த்ததால், ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

கால் இறுதியில் மற்றொரு சீன ஜோடியை சந்திப்பதை தவிர்க்கவே யு யங்-வாங் ஜியாலி ஜோடி தோல்வி கண்டது.

இதேபோல் தென் கொரியா, இந்தோனேஷியா ஆகிய அணிகளும், அடுத்த சுற்று எளிதாக அமைவதற்கு ஏற்ப விட்டுக்கொடுத்து விளையாடியதாக புகார் வெளியானது. இந்தக் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனம் தான் இறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று லண்டன் ஒலிம்பிக் குழு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் புகார்கள் தொடர்பாக போட்டியினை வீடியோ காட்சிகள் மூலம் ஆய்வு செய்த உலக பெட்மிண்டன் சம்மே ளனம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

கால் இறுதிக்கு தகுதி பெற்று இருந்த யு யங்-வாங் ஜியாலி (சீனா), ஜுங் குயிங்-கிம் ஹா நா (தென் கொரியா), ஹா ஜுங் இன்-கிம் மின் ஜுங் (தென் கொரியா), ஜெசியா போலி மெலியனா ஜஹரி (இந்தோனேஷியா) ஆகிய 4 ஜோடிகளை ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தர விட்டது. இதையடுத்து இந்த பிரிவில் எஞ்சியுள்ள ஜோடிகளுக்கு கால் இறுதி வாய்ப்பு வழங்கப் படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே தகுதி நீக்கம் முடிவை சீனா ஏற்றுக்கொண்டது. தென் கொரியா, இந்தோனேஷியா ஆகிய நாட்கள் இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளன. மேன்முறையீடு மனுவை உலக பெட்மிண்டன் சம்மேளனம் பரிசீலனை செய்தது. அதனை நிராகரித்துள்ளதாக உலக பெட்மிண்டன் சம்மேளன பொதுச் செயலாளர் தோமஸ் லுன்ட் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி