ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 14
நந்தன வருடம் ஆடி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,AUGUST, 03, 2012
வரு. 80 இல. 183
 

குத்பா உரையின் சிறப்புகள்

குத்பா உரையின் சிறப்புகள்

பத்து சந்தர்ப்பங்களில் குத்பா உரை நிகழ்த்தப்படுகின்றன.

1. ஜும்மா தினம்

2. நோன்புப் பெருநாள்

3. ஹஜ்ஜுப்பெருநாள்

4. சூரிய கிரகணம்

5. சந்திர கிரஹரணம்

6. மழை வேண்டி தொழும் போது

7. மினாவில் 10ம் நாள்

8. அறபா தினம்

9. மினாவில் 12ம் நாள்அல் நப்றுல் அவ்வல் தினம்

10. மினாவில் 7ம் நாள். ஆனால் ஜும்மா தினங்களிலும் அறபா தினத்திலும் குத்பா முன்னதாக நிகழும். (நூல் இஹானா 2ம் பாகம்)

குத்பாக்களில் ஐந்து கடமைகள் உள்ளன. அல் ஹம்து சொல்லல். நபி மீது ஸலவாது, தக்வா என்னும் ஏவல். முந்திய குத்பாவில் குர்ஆன் வசனம். இரண்டாம் குத்பாவில் துஆ செய்தல் என்பனவாகும்.

இரண்டிலுமாக எட்டு கடமைகள் சேருகின்றன. குத்பா உரை அரபு மொழியில் அமைய வேண்டும். சொந்த மொழியில் உரை நிகழ்த்துவதை மிம்பரின் கீழ் நின்று முன்னதாகப் பேசி முடிக்கவும் இயலும்.

மிம்பரில் நீண்ட உரை நிகழாமலிருப்பதற்கு இது ஒரு கிறந்த வழியாகும். குத்பா உரைகள் தெளிவாகவும், விளக்கமாகவும் அமைய வேண்டும். குர்ஆன், ஹதீது வசனங்களைக் கையாண்டு மக்களுக்கு நேர்வழி காண்பிப்பது கட்டாயம். அசிங்கமான வார்த்தைகள் இடம்பெறுவதை தவிர்த்தல் அவசியம். சொன்னதை மீட்டாமல் பிறரை வஞ்சிக்காமலும் பேச வேண்டும்.

பிரார்த்தனைகள் இரண்டாம் குத்பாவில் இடம்பெறும் போது முக்கியமானவற்றைக் கைக்கொள்வது மட்டும் சிறந்தது. முதலாம் குத்பாவை விட இரண்டாம் குத்பா குறைவாக இருக்க வேண்டும். ஜும்மாத் தொழுகைக்குரிய நேரத்தை விடக் குறைவான நேரம் கொண்டதாக இவை அமைய வேண்டும். மக்கா, மதீனாவில் நிகழும் குத்பாக்களை உதாரணத்தில் கொள்ளலாம்.

இடது கரத்தினால் தடியைப் பிடித்துக்கொள்ளல் வேண்டும். ஆதாரமற்ற செவியேறல் வார்த்தைகள் இடம்பெறக்கூடாது. உலக செய்திகளைக் கீழே நின்று சொல்வது நல்லது. குரல் வளம் உள்ளவர்களாகவும் இனிமையான பேச்சுப் பேசுபவராகவும், குத்பா உரை நிகழ்த்துபவர் தெரிவு செய்யப்படுவது இன்றியமையாத ஒன்றாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி