அருள் மணக்கும் ரமழானில் பத்ர் யுத்த தினம் புகட்டும் பாடம்
அருள் மணக்கும் ரமழானில்
பத்ர் யுத்த தினம் புகட்டும் பாடம்
,ஸ்லாமிய வரலாற்றிலே சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையில் மாபெரும்
திருப்புமுனையை ஏற்படுத்திய சிறப்பு பத்ரு யுத்தத்திற்கு உண்டு. “இன்று உலகில்
முஸ்லிம்கள் நிலைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அன்று முஸ்லிம்கள்
பத்ரு யுத்தத்தில் வெற்றியடைந்ததாலாகும்.
இல்லையென்றால் இஸ்லாம் அன்றே பூண்டோடு
அழிந்து போயிருக்கும்” என்று இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடும் அளவுக்கு பத்ரு
யுத்தம் சிறப்பு வாய்ந்தது. ஆதலால்தான் உலகளாவிய முஸ்லிம்கள், ரமழான் இரவு 17இல்
பத்ரு தினத்தை இன்றும் ஞாபகப்படுத்தி விசேட நன்மையான காரியங்களை மேற்கொள்கின்றனர்.
இஸ்லாமிய வரலாற்றில் ஏனைய யுத்தங்களுக்கும், வெற்றிகளுக்கும் இல்லாத சிறப்பும்,
பெருமையும் பத்ரு யுத்தத்துக்கு உள்ளதென்றால் அது மிகையாகாது.
மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில், அதாவது மதீனாவுக்கு நெருக்கமாக உள்ள ஒரு
இடத்திற்கு பெயர்தான் பத்ரு என்பதாகும். மக்காவிலிருந்து தனது சொந்தங்களையும்,
முழுச் சொத்துக்களையும் இழந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற முஸ்லிம்களை வேரோடு
அழித்து பழிதீர்க்க வேண்டும். இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்ற வைராக் கியத்துடன்
மக்கத்து காபிர்கள் யுத்தத்திற்கு திரண்டுவந்தார்கள்.
ஹிஜ்ரி 2ம் ஆண்டு சிரியாவிலிருந்து வரும் அபுசுப்யான் தலைமையிலான 80 பேர் கொண்ட
வியாபாரக் கோஷ்டியை வழிமறித்து, அவர்களிடமுள்ள பொருட்களை பறிமுதல் செய்யவேண்டும்
என்ற எண்ணத்தில் 313 சில அறிவிப்புக்களில் 314 அல்லது 317 ஸஹாபாக்கள் ஒன்று
கூடினார்கள்.
முஸ்லிம் தரப்பில் இரண்டு குதிரைகள் 70 ஒட்டகங்கள் மாத்திரமே இருந்தன.
மதீனாவில் ஒரு நயவஞ்சகன் (முனாபிக்) இத்தகவலை எதிரிகளுக்கு அறிவித்ததன் விபரீதத்தால்
காபிர்கள் சுமார் 1000 பேர் அல்லது 1300 பேர் 100 போர்க் குதிரைகள் என்னிடங்காத
ஒட்டகங்கள் மற்றும் 600 போர்க் கவச அங்கிகளோடு மக்காவிலிருந்து பெரும் ஆயுதங்களுடன்,
ஆர்பாட்டங்களுடனும் யுத்தத்திற்கு தயாராகி வந்து பத்ரு எனும் இடத்தில் தண்ணீர் ஊற்று
உள்ள பகுதியில் முகாமிட்டு விட்டனர்.
இந்தக் காட்சியை கண்ட நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் திகைத்தனர். உடனே
கதாகரித்துக்கொண்ட பத்ரு ஸ¤ஹதாக்கள் 313 பேர் கொண்ட சிறுபடையை
தயார்படுத்திக்கொண்டனர். முஸ்லிம்கள் தரித்து நின்ற பகுதியில் தண்ணீர் இல்லை. வெறும்
மணல் தரையாகவும், கால்கள் புதையுமளவுக்கு புழுதியுமாகத்தான் இருந்தது.
யுத்தம்
செய்வதற்கு ஏதுவான பூமியாக இல்லாத போதும், அவர்களிடம் இருந்த ஈமானும் தக்வாவும்
எதிரிக்கு அஞ்ஞாமல் தைரியத்துடன் முகம்கொடுக்கும் துணிவை கொடுத்தது. காரணம்
அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்பதில் ஆழமான நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. மேலும்
ஷஹீதுடைய அந்தஸ்துகளை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
சுவனத்தின் இன்பங்களை
சுவாசித்தார்கள். வல்லவனின் பக்கம் திசையைத் திருப்பி அவனிடம் உதவியை நாட
ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களிடம் ஆள் பலமும், ஆயுத பலமும் ஏனைய வசதிகளும் மிகக்
குறைவாகவே காணப்பட்டது. இதற்கு மாறாக காபிர்கள் அனைத்து வசதிகளுடனும், பன்மடங்கு
பலத்துடன் யுத்தத்திற்கு தயாராக இருந்தார்கள்.
ஆட்பலம் ஆயுதம் அனைத்தும் ஈமான் தக்வா உள்ள மக்களுக்கு சிலந்தி வலையைப் போல்தான்.
சிலந்தி வலையால் எந்தப் பாதுகாப்பும் செய்ய முடியாது. முஃமின்கள் ஈமானையும்
தக்வாவையும் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நபியவர்களும் ஸஹாபாக்களும்
அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள். இவர்களுக்கு கிடைத்த பகுதி மணல் திண்டு, கால்
வைத்தால் கீழ் இறங்கும் நிலப்பகுதி, தண்ணீரும் இல்லை. பல சிரமங்கள் இருந்தும், மனம்
தளரவில்லை. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தார்கள். உருக்கமாக துஆ செய்தார்கள்.
அதுவே யுத்தம் பாரிய திருப்பத்தை அடைய காரணமாகியது. (தொடரும்)
அதிபர்
மெளலவி ஆதம் யாkம் (ரஹ்மானி) ஹமீதிய்யா அரபுக்கல்லூரி,
இக்கிரிகொள்ளாவ, அநுராதபுரம்.