மாணவர்களுடன் சென்ற வான் விபத்து; 12 சிறார்கள் காயம் நிட்டம்புவவில்
சம்பவம்
மாணவர்களுடன்
சென்ற வான் விபத்து;
12 சிறார்கள் காயம்
நிட்டம்புவவில் சம்பவம்
தினகரன் செங்கடகல நிருபர்
கொழும்பு, கண்டி வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பாடசாலை
சிறார்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளதாக நிட்டம்புவ பொலிஸார்
தெரிவித்தனர்.
காயமடைந்த சிறார்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று அதிகாலை வேளையில் கண்டி- கொழும்பு பிரதான பாதையில்
ஹொரகொல்ல என்ற இடத்தில் நிகழ்த்தள்ளது.
பாடசாலை சிறார்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று தனியார் பஸ் வண்டியுடன் நேருக்கு நேர்
மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கும் பொலிஸார் தொடர்ந்து
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.