![]()
|
||
|
மாகாண சபை தேர்தல்: அநுராதபுரத்தில் ஜனாதிபதி முதலாவது தேர்தல் பிரசாரம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 7 மாவட்டங்களிலும் தலா ஒரு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இறுதிப் பிரசாரக் கூட்டம் செப்டம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கூறினார். தேர்தல் நடைபெறாத பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், எம். பி. கள் மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் திங்கட்கிழமை முதல் தேர்தல் நடைபெறும் பிரதேசங்களுக்கு சென்று மக்களை சந்திக்கவும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் உள்ளனர். |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |