![]()
|
||
கொகோஸ், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு 138 இலங்கையர்கள் சென்றடைவுகரைக்கு நீந்திச் சென்று உதவி கோரியதாக ஆஸி. அதிகாரிகள் தகவல்
கடந்த இரு தினங்களில் 138 இலங்கையர்களுடன் மூன்று ஆழ்கடல் வள்ளங்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் மற்றும் கொகோஸ் தீவுகளை சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
கரைக்கு நீந்தி வந்தவர்கள் மூலம் தகவல் அறிந்து கொண்ட பொலிஸார் படகிலிருந்தவர்களை பாதுகாப்பாக கரைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் விரைவில் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதேபோன்று கடந்த செவ்வாயன்று இரவு மற்றுமொரு படகு 28 இலங்கையருடன் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளது. அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினர் இப்படகை கைப்பற்றி கரைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதே சமயம் கிறிஸ்மஸ் தீவுக்கு வடக்கே மேலும் இலங்கையருடன் மற்றுமொரு ஆழ்கடல் படகு அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட் டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட் டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 43 பேர் இருந்ததாகவும் இவர்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் அவர்களுக்குத் தேவையான உணவு என்பவை வழங்கப்பட்டு பாது காப்பாக அழைத்துச் செல்லப்படவுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது. கரைக்கு நீந்தி வந்த 4 இலங்கையர்களுள் ஒருவர் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் ‘படகிலுள்ளவர்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவுஸ்திரேலிய பொலிஸார் படகை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர். |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |