இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி பாகிஸ்தானில்
சுட்டுக்கொலை
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி
பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய
முக்கிய தீவிரவாதி ஒருவர் பாக். பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த அப்துல் காபா
அல்லது சைபுல்லா என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் இலங்கை வீரர்கள் மீதான
தாக்குதல் சம்பவத்துடன் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் என பாகிஸ்தான் பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பொது மக்கள் கடந்து செல்லும் பாதையில் பயங்கரவாதிகள் சிலர் பயணம்
செய்வதாக வந்த தகவலை அடுத்து பாக். பொலிஸார் நேற்று முன்தினம் காஜி காட் பாலம் அருகே
வாகன சோதனை நடத்தினர். அப்போது பயணிகள் பஸ் ஒன்றில் இருந்து தப்பி ஓட முயற்சித்த
ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல் லப்பட்டவர் அப்துல் காபா என்ற சைபுல்லா என்பது
தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் கைக் குண்டொன்று கைப்
பற்றப்பட்டுள்ளது.
இந்த நபர் முல்தான் நகரில் பயங்கர தாக்குதல் ஒன்றை நடத்த செல்லும் வழியிலேயே
பொலிஸாரிடம் சிக்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹ¥ர் நகரில் இலங்கை வீரர்கள்
சென்றுகொண்டிருந்த பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை வீரர்களுக்கு
காயம் ஏற்பட்டது. அத்துடன் இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடத்துவது முற்றாக
நிறுத்தப்பட்டது.