ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 14
நந்தன வருடம் ஆடி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,AUGUST, 03, 2012
வரு. 80 இல. 183
 

ராம்தேவுக்கு அமைத்த மேடை சரிந்து 6 பேர் காயம்

ராம்தேவுக்கு அமைத்த மேடை சரிந்து 6 பேர் காயம்

யோகா குரு பாபா ராம்தேவுக்காக அமைக்கப்பட்ட மேடை திடீரென சரிந்து விழுந்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஐந்தர் மந்தரில் அன்னா ஹசாரே, ஊழலை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவும் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்தார்.

அதற்காக ராம்லீலா மைதானத்தில் அவருக்கென தனி மேடை அமைக்கும் பணி நடந்தது. மேடை அமைக்கும் வேலை நிறைவடைந்த நிலையில், மேடை அமைப்பாளர்கள் இறுதிக்கட்ட பணியை மேற்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 6 பேர் படுகாயமடைந்தனர். விரைந்து வந்த பொலிஸார் இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரை மீட்டனர்.

அவர்கள் அனைவரையும் அருகில் இருந்த லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

2 பேருக்கு மட்டும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற 4 பேருக்கும் சிறு காயங்கள் என்பதால் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து மேடை ஒப்பந்தகாரர் விரிந்தாவன் பரத்வாஜிடம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி இந்த அமைப்பின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது “மேடை சரிந்து விழுந்தது துரதிஷ்டவசமானது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி