டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே
குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்
திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
அன்னா ஹசாரே குழுவினருடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக, அவர்கள் முதலில்
உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்.
பிறகு துப்பாக்கி முனை பேச்சாக அது இருக்கக்கூடாது. ஒரு நல்ல நோக்கத்திற்காக அன்னா
ஹசாரே மற்றும் அவரது குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வருவதை ஏற்றுக் கொள்கிறோம்.
அரசு ஒரு போதும் யாரும் இறக்க அனுமதிக்காது. அரசு இது குறித்து உன்னிப்பாக
கவனிக்கும். ஒரு முன்னாள் முதலமைச்சரால் அனைத்து பிரச்சினைகளும் ஜனநாயக முறைப்படியே
தீர்க்கப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தினால் அரசுக்கு எந்தவித பாதிப்பும்
வராது. இது போன்ற உண்ணாவிரத போராட்டம் மணிப்பூரிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற
வேண்டுமென கடந்த 11 வருடங்களாக அங்குள்ள பெண்கள் அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு சட்டமும் பாராளுமன்றத்துக்கு வெளியே இயற்றப்படவில்லை. ஐம்பது கோடி மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ள அவர்கள் மீது நம்பிக்கை
வைத்து உடனடியாக அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்த கடவுள் அவர்களுக்கு நல்ல
மனநிலையை கொடுக்க வேண்டும்.
அன்னா ஹசாரே குழுவினர் ஒரு அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி அவர்கள் தேர்தலில் நிற்க
வேண்டும். அதுதான் ஜனநாயகத்திற்கு அழகு என்றார்.