இலங்கைக்குரிய பாரம்பரிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட ஹோட்டன் சமவெளி
இலங்கைக்குரிய பாரம்பரிய அம்சங்களை
தன்னகத்தே கொண்ட ஹோட்டன் சமவெளி
கே. ஏ. அலீம்
உலகில் சமவெளிகளாக இனங்காணப்பட்டுள்ள இடங்களில் ஹோட்டன் சமவெளியும் முக்கியத்துவம்
பெறுகின்றது. மத்திய மலைநாட்டில் தியகம, பட்டிபொல, தொட்டு பொலகந்த, ஒஹிய்யா, ஹினி
ஹிரிய, கரிவத்த, கிரிகலபொத்த போன்ற பகுதிகளை எல்லைகளாகக் கொண்ட இச்சமவெளி 3160
ஹெக்டர் பரப் பளவுடையதாகும். 1988ல் தேசிய பூங்காவாகவும் 2010 ஆகஸ்ட் 2ம் திகதி உலக
மரபுரிமைத் தலமாகவும் பிரகடனப்படுத்தப்பட்ட இவ்விடம் பொருளாதார சுற்றுலாத்தலமாகவும்
பரிணமிக்கின்றது.
பத்தனைப் புற்றரையில் சாம்பர் இனமான்.
ஹோட்டன் சமவெளி உலகத்திலுள்ள அதி சிறந்த இயற்கைப் புகலிடப் பிரதேசமாகும். இத்தேசியப்
பூங்கா பெருமளவு தாவரங்களுக்கும் பறவைகள், விலங்குகள் மற்றும் மூலிகைச்
செடிகளுக்கும் ஒரு புக லிடத்தினை வழங்குகின்றது.
வர லாற்றில் இப்பிரதேசம் மகாஎலிய
தென்ன என்றழைக்கப்பட்டது. 1800ம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய இலங்கையின்
பிரித்தானிய ஆளுநர் சேர். றொபர்ட் ஹோர்ட்டன் இப்பகுதிக்கு விஜயம் செய்ததைத்
தொடர்ந்து ஹோட்டன் சமவெளி என அழைக்கப்படுகிறது.
மகாவலி, வளவ, களனி ஆகிய கங்கைகளின் வளமே மேட்டுநிலமாகும். மகா எலியதென்னை மேட்டுநில
புல் நிலத்தின் மீது மனிதர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். கற்காலத்தின்
வேட்டைக்காரர்கள் கி.மு. 8000ம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழிவிட்டனர். அவர்களும்
மறைய, சமவெளிகள் அமைதியுற்று இருந்தன.
ஆங்கிலேயர் ஆட்சியைத் தொடர்ந்து இம்மேட்டு நிலங்களில் நடமாடித் திரிந்த யானைகள்
ஆங்கில வேட்டைக் காரருக்கு பலியாகிவிட்டன. மேஜர் தோமஸ் ரொஜர்ஸ் என்பவர் சுமார் 1400
யானைகளைக் கொன்றதாகவும், அவர் மின்னல் தாக்குதலுக்கு உட்பட்டு பலியானாரென்றும் அது
இறை சாபமாகும் எனவும் கூறப்படுவதோடு அவரது கல்லறை இருமுறை மின்னல் தாக்குதலுக்கு
உட்பட்டதாகவும் வரலாறு ஒன்றுண்டு.
பெருமளவு காட்டு மிருகங்களின் வேட்டை நிலமாக இந்த மேட்டுநிலம் விளங்கியது. ஹோட்டன்
மேட்டு நிலத்திற்குரித்தானதாக சாம்பர்மான், சிறுத்தை போன்றவை அறியப் பட்டுள்ளன.
எனினும் இரகசியமான விலங்கினங்களும் சம அளவில் உள்ளன. நெலு எலி போன்ற இனங் கள்
முகில்காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. ஆச்சரிய மூட்டும் இவ்விலங்கினம் நீரிலும்
வாழக்கூடியது.
இங்குள்ள சமவெளி பறவைகளின் சொர்க்க புரியாகும். இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 23
இனப்பறவைகளில் 14 இனங்கள் ஹோட்டன் சமவெளியில் காணப் படுகின்றன. ஹோட்டன்
சமவெளியிலுள்ள மலை சார்ந்த காடு 'பதன' மற்றும் புற்றரை போன்ற தாவர வகைகளுக்கு
புகழ்பெற்றது. இவ்விருதாவரங்களும் வித்தியாசமானவை. குளிர்மையான ஈரப்பற்றுள்ள ஹோட்டன்
சமவெளிச் சூழலில் நன்கு வளர்கின்றன. ஆனால் மேல்சாய்வுகளில் காடுகளும் வழிந்தோடும்
பகுதிகளில் புல் வெளிகளும் காணப்படுகின்றன. இக்காடு சிக்கல் மிக்க சூழல் தொகு
தியாகும்.
இலங்கையின் மொந்தனா காடுகள் உயிரியல் பல்வகைமையாக்கலின் முக்கிய பகுதியாகும். இவை
புவியில் எங்காவது காணப்படாத ஒரு தொகை இனங்களுக்கு அடைக்கலம் அளிக் கின்றன. நீண்ட
தனிப்படுத்தல். காலங்கள், கூர்ப்புத்தேவை என்பதால் பெருமளவு முக்கிய பகுதிகள் தீவ
கங்களாக அல்லது மலைத் தொடர் களாகவுள்ளன. இதுவரை இவ்வாறான 25 பகுதிகள் உலகம் பூராவும்
அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஹோட்டன் சமவெளியின் விஷேட சிறப்பு தாவர மற்றும் விலங்குகளின் வாழிடமாகும். இங்குள்ள
ரொடோ டென்ரன் செடி அழகான பொன் சிவப்பு நிறப்பூக்களைத் தருகின்றது. இது பறவைகளினால்
மகரந்த சேர்க்கை செய்யப்படுகிறது. நாட் டுக்குரிய சிறிய தீசியிஹிரி ரிவீரி பறவைகள்
இங்கு வருவதைக் காணலாம்.
குட்டையான மூங்கில்களையும் இங்கு காணலாம். இதுவே இலங்கையிலுள்ள மிகச் சிறிய
மூங்கில்களாகும். இது நீரோடைகளை அடுத்துள்ள தாழ் சதுப்பு நிலங்களில் வளரும். இதன்
இளம் இலைகள் மான், மறைகளுக்கு உணவாகவுள்ளன. சமவெளிகளூடாக பரவி வரும் வேறு இரு
இனங்களையும் இங்கு நோக்க முடிகிறது.
ஒன்று உயரமான முள்ளார்ந்த மஞ்சட்
பூக்களைக்கொண்ட ஐரோப்பிய முட்புதர் செடிகளாகும். அடுத்த இனம் கடும் பச்சை நிறமான
PTERIDIUM AQULINIUM என்ற பன்னமாகும். இவை இரண்டும் எமது
நாட்டுக்குரியதல்ல. இவை சமவெளிக்கு அச்சுறுத்தலாகவுள்ளதால் இவ்வினங்களைக்
கட்டுப்படுத்த பூங்காவில் நிகழ்ச்சித் திட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள நீரோடையில் வானவில், 'ட்ரெரட்' மீன்களைக் காணலாம். பொழுது போக்கிற்காக
தூண்டில் போட்டு மீன் பிடிப்பதற்காக இம்மீன் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இம்மீனின் அறிமுகம் சுற்றுச் சூழலியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது உண்ணப்படும்
மீனாகும். உள்ளூர் கூனி வகைகளே இம்மீனின் உணவாகும். இதனால் எம்நாட்டில் இறால்
பெருக்கம் குறைவடைந்தது. உயிரியல் பல்வகைமையைப் பாதுகாப்பதே பூங்காவின் நோக்க
மாதலால் வானவில் மீனினத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முகில் காடுகள் இயற்கையின் கடற் பஞ்சுகளாகும். மண்ணில் உள்ள மழைநீரை அவை உறிஞ்சி
மெதுவாக ஆறுகளுக்கு அனுப்புகின்றன. வரண்ட காலங்களில் கூட நீர் கிடைக்க இவை வழி
செய்கின்றன. முகில் காடுகள் மழை பெய்ய உதவுகின்றன.
மேலெழும்பும் வெப்பக்காற்று
மரங்களில் சிக்கி அவை குளிராக்கப்பட்டு முகில்களுக்குள் நிலைமாற்றம் அடைந்து
மழைதருகின்றன. காட்டு மரங்களைத் தறிக்கும்போது முகில்களை மனிதன் தறிக்கின்றான் எனப்
பொருள் கொள்ளப்படுகிறது.
ஹோட்டன் சமவெளிக்கு பெருந் தொகையான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் வருகை
தருகின்றனர். இவர்கள் கிரிகல்பொத்த, தொட்டு பலகந்த மலைகளுக்கு ஏறுதல் புரா தன முகில்
காடொன்றுக்கு வருதல், சாம்பர் மான்களைக் காணல், பேக்க ர்ஸ் நீர் வீழ்ச்சிச் சாரவில்
நனைதல், சிமினிக்குளம், பெலிகுல்ஓயா என்பவ ற்றின் குளிர்ச்சியை அனுபவித்தல், சிறிய
உலகின் முடிவையும் உலகின் அந்தத்திற்கும் நடத்தல் போன்றவற்றைப் புரிகின்றனர். உலக
முடிவுக்கான நடைபாதை 9 கிலோ மீற்றர்களாகும்.
உலகில் பாரம்பரிய அம்சங்கள் நிறைந்த இடங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டு சர்வதேச
ரீதியாக யுனெஸ்கோவினால் ஹோட்டன் சமவெளி 2010ம் ஆண்டில் பிரகட னப்படுத்தப்பட்டது.