நாட்டை பின்னடையச் செய்ய முற்படும் சக்திகளை தோல்வியுற வைக்க வேண்டும்
நாட்டை பின்னடையச் செய்ய முற்படும்
சக்திகளை தோல்வியுற வைக்க வேண்டும்
எதிர்மறையான சிந்தனைகளை விடுத்து இளைஞர் சமுதாயத்தை முன்னேற்றமடைய செய்வோம்
ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே ஆற்றிய உரை
தனது முயற்சியின் மூலம் நிமிர்ந்து நிற்பதற்கானதொரு சூழல் நாட்டினுள்
தோன்றியுள்ளதனால் எதிர்மறையாக சிந்திக்காது தேசிய பொருளாதாரத்தினை உயிர்பிப்பதற்கு
பல்வேறு திறமைகளைக் கொண்ட அனைவரும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதியின் பாராளுமன்ற
அலுவல்கள் தொடர்பான செயலாளர் குமாரசிரி ஹெட்டிகே தெரிவித்தார்.
வெற்றிகரமான பயன் மிக்க பிரஜை ஒருவரை கட்டியெழுப்புவதற்கு அரசு மேற்கொள்கின்ற
முயற்சிக்கு தனியார் துறையினரும் மற்றும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களினதும்
ஒத்துழைப்பு முக்கியமெனக் குறிப்பிட்ட அவர், இளைஞர் யுவதிகளின் தொழில்சார் திறமைகளை
இனம் கண்டு அதற்கமைய அவர்கள் முன்னேற்றமடைவதற்குத் தேவையான சக்தியை வழங்குதல்
வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலையின் கூட்ட மன்றத்தில் நடைபெற்ற 'மொகான் லால்
கிரேரு' அமைப்பில் பாடநெறிகளைப் பின்பற்றி திறமைகளை வெளிப்படுத்திய இளைஞர்,
யுவதிகளுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் விழாவில்
பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குமாரசிரி ஹெட்டிகே இவ்வாறு
தெரிவித்தார்.
ஆங்கிலம், கணனி, சமையற் கலை உட்பட பாடநெறிகளை இலவசமாகப் பயின்ற இளைஞர், யுவதிகள்
சுமார் 500 பேருக்கு இங்கு பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அங்கு குமாரசிரி ஹெட்டிகே மேலும் தெரிவித்ததாவது :-
பலவிதமான அரசியல்வாதிகள் உள்ளனர். சிலர் சுயநலம் மிக்கவர்கள். மேலும் சிலரிடம் அறிவு
இருந்த போதிலும் தூரநோக்கு கிடையாது. மொகான் லால் கிரேரு அவ்வாறான ஒருவர் அல்லர்.
உண்மையில் அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதியாவார்.
தான் சாதாரண வழியில் உழைக்கின்ற
பணத்தில் ஒரு பகுதியை நாட்டின் நலனிற்காக ஈடுபடுத்தி சிறந்த ஆன்மிக திருப்தியை அவர்
பெறுவதை நாம் காண்கின் றோம். மொகான் லால் கிரேரு அமைப்பின் மூலம் 20 பாடநெறிகள்
இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனூடாக ஆயிரக் கண க்கான இளைஞர், யுவதிகள்
பயனடைந்துள்ளனர். கல்வியாளர் என்ற வகை யிலும் தேசப்பற்றுள்ள அர சியல்வாதி என்ற வகை
யிலும் மொகான்லால் கிரேரு பலருக்கு ஒரு முன் னுதாரணமிக்கவராவார்.
இன்று உலகில் பல நாடுகள் பல்வேறு சவால் களுக்கு முகம் கொடுத் துள்ளதனை நாம் ஏற்றுக்
கொள்ள வேண்டும். சில நாடுகளில் பொருளாதாரப் பிரச்சினைகள் உக்கிரம டைந்துள்ளன. வறுமை,
வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச் சினைகளுக்கு அந்த நாடுகள் முகம் கொடுக்க
வேண்டி ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்தினை தோற்கடித்ததன் பின்னர் இலங்கை படிப்படியாக
சவால்களை வெற்றி கொண்டு முன்னோக்கிச் செல்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த தலைமைத்துவமே இவ்வெற்றிகளுக்குக்
காரணமாகும். அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 10 வீதமாகும். ஐக்கிய இராச்சியத்தில்
வேலைவாய்ப்பின்மை 7 வீதமாகும். உலகில் குறைந்தளவு வேலைவாய்ப் பின்மை வீதத்தினைக்
கொண்ட நாடுகளுக்கிடையில் இலங்கை உள்ளடங்குகின்றது.
இலங்கையில் வேலைவாய்ப்பின்மை 4 வீதமாகும். இவை வெற்றிகளாகும். பெளதிக அபிவிருத்தி
வேகமாக முன்னகர்கின்றது. நாடொன்றினை அபிவிருத்தி செய்தல் என்பது கட் டடங்கள் மற்றும்
பொதுப் பாதைகள் அமைத்தல் மட்டுமன்று. மனிதவள அபிவிருத்தியும் அதனுள் அடங்கும்.
முப்பது வருட பயங்கரவாதம் காணப்பட்ட நாடொன்று இந்தளவு வேகமாக முன்னேறிச் செல்லுமென
நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
பிரச்சினைகளும் சவால்களும் மேலும் உள்ளன. 2005 ஆம் ஆண்டாகும் போது இந்த நாடு
கட்டியெழுப்பக் கூடிய நிலையில் காணப்பட்டதா என சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த
சுதந்திர நாட்டில் புதிய ஆக்கங்களுக்கு இடமுண்டு. நாட்டிற்குப் பொருத் தமான கல்வி
முறை அமைக்கப்படும் வரையில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இயலாது.
நாட்டைப் பற்றி எதிர்மாறாக சிந்திக்கத் தேவையில்லை. நாடு பெற்றுக் கொண்டுள்ள
வெற்றிகள் விசாலமானதாகும். நாட்டினைப் பின்னோக்கிச்செலுத்த முயற்சிக்கின்ற அனைத்து
சக்திகளையும் தோல் வியடையச் செய்ய வேண்டும். இந்தப் பயணத்தில் இளைஞர், யுவதிகள்
மேற்கொள்ள வேண்டிய கருமங்கள் மிகவும் விசாலமானதாகும். பிள்ளைகளைப் பாவச் செயல்களி
லிருந்து விடுவித்து அவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமையாகும்.
அவ்வாறில்லையெனின் சிறந்த சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்ப முடியாது
இவ்வாறு குமாரசிரி ஹெட்டிகே தெரிவித்தார்.
கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்புப் பாராளுமன்ற
உறுப்பினர் மொகான் லால் கிரேரு இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது :-
இந்த நாடில் நாற்பது இலட்சம் மாணவர்கள் 9600 பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர்.
220000 ஆசிரியர்கள் உள்ளனர். வருடத்திற்கு சுமார் 22500 மாணவர்கள் பல்கலைக்
கழகங்களுக்குத் &>ரிவாகின்றனர். இதில் பெரியதொரு தவறு உண்டு. உயர் தரத்திற்குத் தோன்
றுகின்ற சுமார் 400000 மாணவர்களில் 22500 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக் கழக அனுமதி
கிடைக்கின்றது.
பல்கலைக் கழக அனு மதிக்கான குறைந்த தகை மையினைப் பெறுகின்ற அதிகமான மாணவர்கள்
உள்ளனர். பல்கலைக் கழக அனுமதி பெறுகின்ற 22500 மாணவர்களைப் பற்றியே நாம் பேசுகிறோம்.
பல்கலைக் கழக அனுமதிக்கான குறை ந்த தகைமையினைப் பெறுகின்ற ஆனால் பல் கலைக்
கழகங்களைப் பெற முடியாதுள்ள வருடம் தோறும் சுமார் 150000 மாணவர்களின் கவலைகளையும்
வேதனைகளையும் யாரும் கேட்பதில்லை.
இருப்பினும் ஜனாதிபதி அவர்கள் அது தொடர்பாக நன்றாகக் கவனம் செலுத்தினர். பாடசாலை
மற்றும் பல்கலைக் கழகங்களில் இருந்து விலகுகின்ற அந்தப் பிரிவினருக்கு
குறிப்பிட்டளவு தொழில் சார் பயிற்சிக்கான வழிகாட்டலை வழ ங்க வேண்டுமென அவர் தீர்மா
னித்தார்.
அதற்கமைய தற்பொழுது நிக ழ்ச்சித் திட்டம் ஒன்று அமுல் படுத்தப்படுகின்றது.
தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தினை கிரா மத்திற்குக் கொண்டு செல்லல் வேண் டும்.
பாடசாலை மட்ட தொழில்சார் பயிற்சி மற்றும் வழிகாட்டல் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பாட சாலையில் பரீட்சையில் தோல்வி யுற்றால் பிள்ளைகளிடத்தில் ஏற் படுகின்ற உளப்
பாதிப்பு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. அவர்கள் நிமிர்ந்து நிற்க கைகொடுத்தல்
வேண்டும். மஹிந்த சிந்தனை என்பது அனைவரினதும் எதிர்காலத்திற்கான தரிசனமாகும்.
களனிப் பல்கலைக் கழகத்தின் பாளி மற்றும் கலாசார பிரிவின் பேராசிரியர் அருண கே.
கமகேயும் இங்கு உரையாற்றியதுடன் 16 விசேட பாடநெறிகளைப் பயின்ற பயிலு னர்களுக்கு
டிப்ளோமா சான்றிதழ் பத்திரமும் வழங்கப்பட்டது.