முன்கூட்டி அறிவித்த பின்னரே இனிமேல் மின்வெட்டு அமுல்
முன்கூட்டி அறிவித்த பின்னரே இனிமேல் மின்வெட்டு அமுல்
எம். எஸ். பாஹிம்
நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று முன்னறிவிப்பின்றி மின்வெட்டு அமுல்படுத்தப்பட்ட
போதும் இனிவரும் தினங்களில் முன்கூட்டி அறிவித்த பின்னரே மின்வெட்டு
அமுல்படுத்தப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.
கெரவலபிடிய மற்றும்
நுரைச்சோலை அனல் மின்னிலையங்களில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நேற்று முதல் சில
பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
முன் அறிவித்தல் இன்றியே காலை
வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதோடு இந்த நடவடிக்கை இடை
நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை கூறியது.
எந்தெந்தப் பிரதேசங்களில் எந்த
நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக விசேட
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கைப்படி மின்வெட்டு
அமுல்படுத்தும் இடங்களுக்கு அது குறித்து முன்கூட்டி அறிவிக்கப்பட வுள்ளதாக மின்சார
சபை கூறியது.
இதேவேளை, கோளாறு, ஏற்பட்டுள்ள இரு மின் உற்பத்தி நிலையங்களையும் திருத்தும் பணிகள்
துரிதமாக முன்னெடுக் கப்படுகிறது.
கெரவலபிடிய மின்நிலைய திருத்தப் பணிகள் இந்த வார இறுதிக்குள் நிறைவு செய்யத்
திட்டமிடப்பட்டுள்ளது.