ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 

உனக்காக காத்திருப்பேன்

உனக்காக காத்திருப்பேன்

இதயத்தை கொள்ளையிட்ட காரிகையே
இன்னும் தான் பேசுதற்கு மறுக்கின்றாய்
உதயத்தை நோக்கிய சந்திரனும்
உனைக்கண்டு நாணமுற்று மறைந்ததுவே

கடிதத்தை தந்துவிட்ட சின்னவளே
கானல்வரி எழுதுதற்கு மறந்தனையோ
குடி முழுகிப் போனாலும் பரவாயில்ல
குதூகலமாய் வாழவைப்பேன் வாராயோ

உனைக்கண்ட நாளாக என்நெஞ்சம்
உணர்வற்று வேறாகிச் செல்கிறதே
எனையன்றி வேறொருவர் கிடைத்தாலும்
எப்படித்தான் உன் நினைவை இழந்திருப்பேன்

அடியற்ற மரம்போல கிடந்தாலும்
அனலிட்ட மெழுகுபோல் உருகினாலும்
விடியலுக்காய் உனக்காக காத்திருப்பேன்
வீண் பழிகள் சேராமல் காத்திடுவேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி